போட்டாரே ஒரு போடு… வாலியின் பதிலில் தலைதெறிக்க ஓடிய குறும்புக்கார நிருபர்

0
113

கவிஞர் வாலியின் பாடல்கள் எல்லாமே வாலிப உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும். அந்த ரசனைக்கு ஏற்பவும் அவரால் முடியும் என்பதால் அவரை ‘வாலிபக் கவிஞர்’ என்றே அழைத்தனர். அவரால் தத்துவப் பாடல்களிலும் கொடி கட்டிப் பறக்க முடியும்.

உதாரணமாக எம்ஜிஆருக்கு வாலி எழுதிய ‘கண்போன போக்கிலே…’ பாடலை இப்போது கேட்டாலும் இது வாலியா எழுதியது என்று எண்ணத் தோன்றும். ஏன்னா அந்தப் பாடலின் வரிகளில் தத்துவம் பொங்கி வழியும்.

இது கண்ணதாசன் பாடல் மாதிரி அல்லவா இருக்கிறது என்றே எல்லோரும் கேட்பர். ஆனால் அது வாலி என்றதும் ஆச்சரியப்பட்டனர். கண்ணதாசனே அவரது அந்தப் பாடலைக் கேட்டு பாராட்டியுள்ளார். அந்த வகையில் வாலி தமிழ்த்திரை உலகில் மறக்க முடியாத கவிஞர்.

அவரிடம் ஒரு முறை குறும்புக்கார நிருபர் ஒருவர் ‘உங்களுக்கு ஏன் வாலி என்று பெயர் வைத்துள்ளீர்கள். ரங்கராஜன் என்ற பெயரே நல்லா தானே இருக்கு’ன்னு கேட்டுள்ளார். அதற்கு கவிஞர் அல்லவா சும்மா பதில் சொல்வாரா. இலக்கிய நயம் கலந்து அதிரடியாகப் பதில் சொல்லி இருக்கிறார்.

‘எனக்கு நேரா இருக்கிறவங்களோட அறிவில் பாதி எனக்கு வந்துரும்னு தான் அப்படி பேரு வச்சிருக்கேன்’ என்றார். ஏன்னா ராமாயணத்தில் வாலிக்கு எதிராக யார் நின்று போரிட்டாலும் அவர்களின் பலத்தில் பாதி வாலிக்கு வந்து விடும்.

அதனால் தான் ராமனே வாலியை மறைந்து நின்று அம்பை எய்திக் கொல்வார். அந்த வேளையில் வாலி இப்படி சொன்னதைக் கேட்டதும் நிருபர் குறும்பாக ‘அப்படி ஒண்ணும் உங்களுக்கு அறிவு வளர்ந்த மாதிரி தெரியலையே…’ என கேட்டுள்ளார்.

அதற்கு வாலி நெற்றிப்பொட்டில் அறைந்தாற் போல பதில் சொன்னார். ‘என்ன தெரியுமா? என்ன செய்ய… எனக்கு எதிரே இருக்கிறவங்களுக்கு அறிவே இல்லையோ என்னவோ?’ என வாலி சொன்னதும் நிருபர் அந்த இடத்தை விட்டு எழுந்து தலைதெறிக்க ஓடிவிட்டார்.

google news