சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக மாறி 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டி தந்தது. அடுத்த சிவகார்த்திகேயன் என்றும் சிவகார்த்திகேயன் தாண்டி கவின் சென்று விட்டார் என்றும் ஏகப்பட்ட பில்டப்புகள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் நான்காவது நாளில் நாக் அவுட் ஆகிவிட்டதாக சினிமா வட்டாரங்கள் பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை வெளியிட்டுள்ளன.
சுமார் 12 கோடி பட்ஜெட்டில் உருவான ஸ்டார் படத்தை பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கி இருந்தார். கடந்தாண்டு கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூலை செய்த நிலையில், ஸ்டார் படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு பலரும் இந்த படம் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் சாதனைப் படைக்கும் என பெரிதாக எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
இதையும் படிங்க: மோசமான ரிலேஷன்ஷிப்!.. தனுஷ் கேடின்னா?.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜில்லா கேடி!.. சுசித்ரா பகீர் பேச்சு!..
ஆனால், கவினுக்கு இன்னும் அந்த அளவுக்கு மார்க்கெட் அதிகரிக்கவில்லை என்றும் ஸ்டார் படம் படு சுமாராக உள்ள நிலையில் அந்த படத்தை கைவிட்டு விட்டதாக கூறுகின்றனர். முதல் 4 நாட்களில் ஒட்டுமொத்தமாக 15 கோடி ரூபாய் வசூலை ஸ்டார் திரைப்படம் பெற்றிருப்பதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதல் வாரத்தில் அரண்மனை 4 திரைப்படம் 30 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் இரண்டாம் வாரத்தில் 50 கோடி வசூலை அந்த படம் தொட்டு அதற்கு மேல் ஓட முடியாமல் ஸ்லோவாகி விட்டது. இந்நிலையில், ஸ்டார் திரைப்படம் முதல் வாரத்திலேயே 15 கோடி தாண்ட முடியாத நிலையில், 2ம் வாரத்தில் எல்லாம் இந்த படம் ஓடுமா என்பது சந்தேகம் தான் என்கின்றனர். திங்கட்கிழமையான நேற்று வெறும் 1.15 கோடி ரூபாய் மட்டுமே ஸ்டார் படம் வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: விதவை பெண்ணுடன்தான் உனக்கு திருமணம்! சிவக்குமாரின் ஜாதகத்தை கணித்த நடிகை.. யார் தெரியுமா?
அதிகபட்சமாக 20 கோடி வசூல் கூட தொடுமா என்று தெரியவில்லை என்றே பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஸ்டார் படத்தில் கவின் உசுரை கொடுத்து நடித்தாலும் இளன் அதை சரியாக கையாளவில்லை என்றும் அடுத்து நெல்சன் தயாரிப்பில் உருவாகும் பிளடி பெக்கர் திரைப்படமாவது கவினுக்கு வெற்றியை கொடுக்கிறதா என்பதை பார்ப்போம் என சினிமா வட்டாரத்தில் பலரும் பேசி வருகின்றனர்.
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…
Vijay TVK:…
Idli kadai…