Categories: Cinema News latest news

எப்படியா உனக்கு இப்படி தோணுச்சு… எனக்கு தோணலையே… சிம்பு படத்தால் ஃபீல்லான கே.பாலசந்தர்!

KBalachander: சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தினை பார்த்த கே.பாலசந்தர் சிலிர்த்து பேசிய ஒரு சம்பவத்தினை தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

நடிகர் சிம்பு மற்றும் திரிஷா இருவரின் நடிப்பில் இணைந்து வெளியான திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். பாடல்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது. நடிகர் சிம்புவின் கேரியரில் மிக முக்கியமான படமானது.

இதையும் படிங்க: என்ன அடுத்த கல்யாணமா? நீங்க உருட்டுறது முழுசுமே தேவையில்லாத ஆணி தான்!

முதலில் இப்படத்தில் அல்லு அர்ஜூன் தான் நடிக்க இருந்தாராம். ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்களையும் சொல்லி இருந்தார். ஆனால் படப்பிடிப்பு தொடங்க இருந்த ஒரு வாரத்துக்கு முன்னர் தான் சிம்வுவை ஓகே செய்து இருக்கிறார். சிம்புவின் கார்த்திக், திரிஷாவின் ஜெஸ்ஸி கேரக்டர் அவர்களின் கேரியர் அடையாளமானது.

இப்படத்தின் ரிலீஸ் மிகப்பெரிய அளவில் வைரலாக பேசப்பட்டது. நிறைய பிரபலங்கள் இப்படத்தினை பாராட்டி பேசி இருப்பார்கள். இதில் ஒருப்படி மேலே போன பிரபல இயக்குனர் கே.பாலசந்தர், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தினை பார்த்து ரொம்பவே சிலாகித்து விட்டாராம்.

இதையும் படிங்க: இதற்காக தான் நடிப்பில் இறங்கினேன்… அந்த விஷயம் நல்லா இருக்கும்.. ஓபனாக சொன்ன கௌதம் மேனன்!

Published by
Shamily