×

இந்த அவமானம் நடிகருக்கு தேவையா? - வீடியோ வெளியிட்ட கீர்த்தி சுரேஷ் 

 
இந்த அவமானம் நடிகருக்கு தேவையா? - வீடியோ வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடித்த பென்குயின், மிஸ் இந்தியா ஆகிய திரைப்படங்கள் ஒடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

தற்போது தமிழில் ரஜினியுடன் அண்ணாத்தே, செல்வராகவனுடன் ‘சாணி காகிதம்’ படங்களிலும், தெலுங்கில் நிதின் நடிக்கும் ‘ரங்தே’ புதிய படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்ற போது  படப்பிடிப்பு இடைவேளையில், கீர்த்தி சுரேஷ் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது நிதினும், பட இயக்குனரும் அவருக்கு தெரியாமல் அவரின் அருகில் சென்று செல்பி எடுத்தனர். அந்த புகைப்படத்தை நிதின் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர அப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த புகைப்படம் கடந்த வரும் நவம்பர் மாதம் வெளியானது.  இந்த திரைப்படம் மார்ச் 19ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.

nithin

இந்நிலையில், பதிலுக்கு நிதினை கலாய்க்கும் வகையில் ஒரு வீடியோவை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்து ‘பதிலுக்கு பதில்’ என ஜாலியாக குறிப்பிட்டுள்ளார்.  நிதின் தலையாட்டி பொம்மை போல் தலையை ஆட்டுவது போலவும், அவர் பெண் குரலில் பாடுவது போலவும் வீடியோவை கீர்த்தி உருவாக்கியுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News