தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சர்க்கார் என பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் கீர்த்தி.
தமிழில் எப்படி முன்னணி நடிகையாக வலம் வருகிறாரோ, அதேபோல தெலுங்கிலும் இவர் முன்னணி நடிகையாக இருக்கிறார். அங்கு பவன் கல்யாண், மகேஷ் பாபு என முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்களேன் – ப்ளீஸ் ஒரே படம் தான்.! கனவு கன்னியை கெஞ்ச வைத்த புஷ்பா.!
இதில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு உடன் தற்போது சர்க்காரு வாரிபாட்டா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே மாதம் திரைக்கு வர உள்ளது என கூறப்படுகிறது. தற்போது இப்படத்தில் இருந்து ஒரு பாடல் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாக உள்ளது.
அதற்கான அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் முதுகில் சாய்ந்தபடி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மகேஷ்பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் மிகவும் அழகாக இருக்கின்றனர். பாடலும் அதே போல் அழகாக இருக்குமா என்று பிப்ரவரி 14 வரை காத்திருந்து தெரிந்துகொள்ளலாம்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…