Categories: Cinema News latest news

இப்படி நம்ப வச்சி ஏமாத்திடீங்களே.?! மன வேதனையில் கீர்த்தி சுரேஷ்.!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் நடிகைகளில் மிக முக்கியமானவர் கீர்த்தி சுரேஷ். கவர்ச்சி புகைபடங்கள் வெளியிட்டு கிளாமர் கதாபாத்திரங்களில் தலைகாட்டும் முன்னணி நடிகர்கள் மத்தியில் தனது நடிப்பு திறனால் மட்டுமே முன்னணி நடிகையாக இருக்கிறார் கீர்த்தி.

ஆனால், எனோ இவருக்கு தற்போது நல்ல காலம் இல்லை போல. இவர் நடித்த படங்கள் அவ்வளவாக பெரிய வெற்றியை பெறவில்லை. பெண்குயின், மிஸ் இந்தியா, அண்ணாத்த, குட்லக் சகி என அவர் அண்மையில் நடித்த பல படங்கள் தோல்வியில் முடிந்துவிட்டன.

செல்வராகவன் உடன் நடித்த சாணி காயிதம் ஓரளவு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.  இவர் தானே தயாரித்து அண்மையில் வெளியான மலையாள திரைப்படம் வாசி. இந்த படத்தில் டோவினோ தாமஸ் ஜோடியாக கீர்த்தி நடித்து இருந்தார்.

இதையும் படியுங்களேன் –  அனிருத் வேண்டவே வேண்டாம்.. கமலிடம் அடம் பிடிக்கும் இயக்குனர்.! சிவகார்த்திகேயன் கோச்சிக்க போறார்…

இருவருமே வக்கீலாக நடித்து இருந்தனர். கோர்ட் முழுக்க தான் இதன் கதைக்களம். இந்த படத்தின் கதையை மிகவும் நம்பினார் கீர்த்தி. இந்த படம் நிச்சயம் வெற்றி பெரும் என அவரே தயாரிக்கவும் செய்தார். ஆனால் இந்த படம் கேரளாவில் போதிய வரவேற்ப்பை பெறாமல் தோல்வியை தழுவியது. இதனால், கீர்த்திக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.

இந்த திரைப்படம் பெரிதாக ஓடும். மலையாளத்தில் நமக்கு நல்ல பெயர் கிடைக்குமே என எதிர்பார்த்த கீர்த்திக்கு தற்போது ஏமாற்றமே கிடைத்துள்ளதாம்.

Manikandan
Published by
Manikandan