×

தாயைக் கொன்று காதலனுடன் ஓட்டம்- எதற்காக தெரியுமா ?

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தாயாரைக் கொலை செய்துவிட்டு காதலனுடன் அந்தமான் சென்று தலைமறைவாகியுள்ளார்.

 

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தாயாரைக் கொலை செய்துவிட்டு காதலனுடன் அந்தமான் சென்று தலைமறைவாகியுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த நிர்மலா என்ற பெண்ணுக்கு அமிர்தா என்ற மகளும் ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர். வங்கியில் வாங்கி இருந்த 15 லட்ச ரூபாய் கடனுக்காக அமிர்தாவுக்கு அவரது தாய்க்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் சத்தம் கேட்கவே ஹரிஷ் எழுந்து பார்த்துள்ளார். அப்போது நிர்மலாவும் அமிர்தாவும் கோபமாக கத்திக் கொண்டு இருந்துள்ளனர். இதையடுத்து ஹரிஷ் எழுந்து சென்று பார்த்த போது அமிர்தா நிர்மலாவைத் தாக்கிக் கொண்டு இருந்துள்ளார். ஹரிஷ் அவரைக் காப்பாற்ற நினைத்த போது நிர்மலா கீழே விழுந்துள்ளார். இதனால் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிர்மலா உயிரிழந்துள்ளார். இதையறிந்த அமிர்தா தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து போலீஸார் அவரைத் தேடி சிசிடிவி காட்சிகளில் அவர் ஒரு இளைஞர்ருடன் பெட்டியோடு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் செல்போன் எண்களை ட்ராக் செய்த போது அது அந்தமான் தீவுகளில் காட்ட, அங்குள்ள போலீஸாரின் உதவியோடு இருவரையும் கைது செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News