×

உச்ச நடிகர் படத்துக்கு நோ சொன்ன நம்பர் நடிகை... 

நம்பர் நடிகை தான் வேணும் என அடம் செய்த உச்ச நடிகர், நடிகையின் பதிலால் ஆடிய படக்குழு. 
 
உச்ச நடிகர் படத்துக்கு நோ சொன்ன நம்பர் நடிகை...

கோலிவுட்டின் முன்னணி நடிகரான அவர், சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்திருக்கிறார். ஒரே நேரத்தில், அரசியல், சினிமா என இரட்டை குதிரைகளில் சவாரி செய்துகொண்டிருக்கிறார். 

இளம் இயக்குனரின் அடுத்த படத்தில் நம்ம ஹீரோ நடிக்கிறார். தேர்தலுக்குப் பிறகு படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. ஹீரோயின் தேடுதல் வேட்டை நடந்து வருகிறதாம். ஹீரோவோ தமிழின் முன்னணி நடிகையாக இருக்கும் நம்பர் நடிகையுடன்தான் இதுவரை நடித்ததே இல்லை. அவரையே புக் பண்ணுங்க என்று அடம்பிடிக்கிறாராம். 

தொல்லை தாங்காத படக்குழு அம்மணியை அணுகி, இந்த விவரத்தை கூறி கால்ஷூட் கேட்டு இருக்கிறார்கள். ஆனால், அசராத நம்பர் நடிகை சொல்றேன் என்பதோடு முடித்துக் கொண்டு இருக்கிறார். உச்ச நடிகர் எப்போதுமே அவர் மட்டுமே திரையில் ஸ்கோர் செய்ய வேண்டும் என நினைப்பார். அவர் படத்தில் தனக்கு நடிக்க விருப்பம் இல்லை என அம்மணி அவர் வட்டாரத்தில் புலம்பியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News