Categories: Cinema News latest news

5 ஆம்புலன்ஸ் கொடுத்த கேபிஒய் பாலா!.. இப்போ மாற்றுத்திறனாளிக்கு என்ன உதவி செஞ்சிருக்காரு பாருங்க!

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் காமெடி ஏதாவது கலந்து கொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த பாலா தொடர்ந்து தன்னால் இயன்ற உதவிகளை உதவி தேவைப்படுபவர்களுக்கு செய்து வருகிறார்.

ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லாமல் கர்ப்பிணிகள் அவஸ்தைப்பட்டு வரும் மலை கிராமங்களை தேடி கண்டுபிடித்து இதுவரை ஐந்து ஆம்புலன்ஸ்களை தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: ‘ராயன்’ திரைப்படம் அந்த மாதிரி படமா? இன்னொரு வெற்றிமாறனா உருவெடுக்கும் தனுஷ்

மேலும், புயல் மலையில் சிக்கித் தவித்த மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்து பாலா செய்துள்ள உதவிக்கு பலரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்ததாக எம்சிஏ படிப்பை முடித்துவிட்டு வெளியில் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனத்தை பரிசாக அவரது வீட்டுக்கே சென்று கேபிஒய் பாலா பரிசளித்து இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: கண்ட இடத்துல காத்துவாங்குதே!.. பப்பரப்பான்னு காட்டும் பார்த்திபன் பட ஹீரோயின்.. யாருன்னு பாருங்க!..

சம்பாதிக்கும் எல்லாம் சுயநலத்துடன் நடிகர்கள் ஒரு வீட்டுக்கு பல வீடுகளாக வாங்கி போட்டு ஒரு காருக்கு பல கார்களாக அடுக்கி பல இடங்களில் நிலங்களை வாங்கி குவித்து சேர்த்து வைக்கும் நிலையில், நிகழ்ச்சிகள் மூலம் தனக்கு கிடைக்கும் சம்பளத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு உதவும் பாலாவின் என்ற நல்ல குணம் பாராட்டுதலுக்குரியது.

கேபிஒய் பாலாவுக்கு மேலும், பல படங்களும் ஷோக்களும் கிடைத்தால் இன்னும் பலருக்கு உதவி செய்வார் என்றே ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். பாலா செய்த செயலை பார்த்து சந்தோஷமடைந்த டிடி நீலகண்டன் உள்ளிட்ட பலர் அவரது புதிய போஸ்ட்டுக்கு கமெண்ட்டுகளையும் லைக்குகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/C35bBFmxWuU/

Saranya M
Published by
Saranya M