Categories: Bigg Boss latest news television

குரேஷி, புகழ் மீது கடும் கோபத்தில் கமல்ஹாசன்!… மன்னிப்பு வீடியோவுக்கு பின்னால் இதெல்லாம் நடந்து இருக்கா?

Kamalhassan: தமிழ் பிக்பாஸின் இந்த சீசனில் தான் போட்டியாளர்களை தாண்டி கிட்டத்தட்ட கமல் மீது கூட நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அவரை ட்ரோல் மெட்டிரியலாகவே மாற்றி விட்டனர். இதில், குரோஷி, புகழ் செய்த வீடியோ வேறு வைரலானது தற்போது பெரும் சிக்கலை உருவாக்கி விட்டது.

பிக்பாஸ் தமிழ் 7 முடிந்து விட்டது. அர்ச்சனா கப்பை தூக்கி சென்றாலும் சர்ச்சை மட்டும் இன்னும் ஓய்ந்தப்பாடு இல்லை. இதில் இன்னொரு சிக்கலும் உருவாகி இருக்கிறது. மலேசியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் குரோஷியும், புகழும் செய்த ட்ரோல் வீடியோ சமீபத்தில் ரிலீஸானது.

இதையும் படிங்க: விக்கிக்கு நடந்தது நமக்கும் நடந்திருமோ? ‘ஏகே 63’ க்காக பக்கா ஸ்கெட்ச் போட்டு வேலையை ஆரம்பிக்கும் ஆதிக்

இதில் மாயா மற்றும் கமலை இணைத்து இருவரும் கலாய்த்து இருந்தனர். 2 மாசம் முன்னர் செய்த வீடியோ என்று புகழ் தரப்பு கூறி இருந்தது. இருந்தும் சரியாக பைனல் நாளில் அது ரிலீஸாகி கண்டனத்துக்கு உள்ளானது. இதை தொடர்ந்து எங்களுக்கு கொடுத்த ஸ்கிரிப்ட்டை தான் செய்தோம். கமல் மீது எங்களுக்கு மரியாதை இருக்கு.

மன்னித்து விடுங்கள் என குரோஷி மற்றும் புகழ் இருவரும் பகிரங்க மன்னிப்பு வீடியோ வெளியிட்டனர். இது குறித்து செய்யாறு பாலு கூறும்போது, இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே கமல் விமர்சிக்கப்பட்டு இருக்கிறார். அது குறித்து அவர் பெரிதாக கவலைப்படவே இல்லை. 

இதையும் படிங்க: என்னங்க மாயா எப்படி இருக்கீங்க? போட்டி முடிஞ்சாச்சு சண்டையை ஆரம்பிச்சிடலாமா? பிரதீப்பின் வைரல் ட்வீட்

அவர்களும் நாங்க கமல் சாரின் காலில் கூட விழுறோம் என்றனர். ஆனால் அவர்கள் காலில் விழ வேண்டாம். ஓபனாக மன்னிப்பு வீடியோ போடுங்கள் என்றனராம். அந்த மிரட்டலை தொடர்ந்தே இருவரும் மன்னித்து விடுங்கள் என வீடியோ போட்டனர் எனத் தெரிவித்து இருக்கிறார்.

Published by
Shamily