×

லாபம் எப்ப வந்துச்சு தெரியுமா?!... விஜய் சேதுபதி பட புதிய டிரெய்லர் வீடியோ

விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.
 
laabam
ஹைலைட்ஸ்:
வரி என்கிற பெயரில் பெரு முதலாளிகள் மக்கள் எப்படி சுரண்டி பிழைக்கிறார்கள் என்பது இப்படத்தில் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையை இயக்கி புகழ் பெற்றவர் எஸ்.பி. ஜனநாதன். இயற்கை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சொற்பமான படங்களை இயக்கி இருந்தாலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இச்சூழலில், கடைசியாக லாபம் படத்தை இயக்கி முடித்து இருந்தார். ஆனால், திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் அவர் மரணமடைந்தார்.

லாபம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜகபதி பாபு, கலையரசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வரி என்கிற பெயரில் பெரு முதலாளிகள் மக்கள் எப்படி சுரண்டி பிழைக்கிறார்கள் என்பது இப்படத்தில் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் வருகிற 9ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய டிரெய்லவர் வீடியோவை விஜய் சேதுபதி  வெளியிட்டுள்ளார்

From around the web

Trending Videos

Tamilnadu News