Categories: Cinema News latest news

வாழ்வு தான்!.. கேபிஒய் பாலாவுக்கு ஊட்டிவிட்ட தளபதி 68 பட நடிகை!.. வெளியான சூப்பர் ஸ்டில்ஸ்!..

நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தில் நடித்து வரும் நடிகை லைலா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அப்போது விஜய் டிவி பிரபலமான கேபிஒய் பாலாவுக்கு ஊட்டி விடும் புகைப்படத்தை தற்போது பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

1980ல் பிறந்த நடிகை லைலா சமீபத்தில் தனது 43வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். நடிகை லைலாவின் பிறந்தநாள் விழாவில் கேபிஒய் பாலாவும் கலந்து கொண்ட நிலையில், இருவரும் எடுத்துக் கொண்ட தனிப்பட்ட கலாட்டா புகைப்படங்களை பாலா வெளியிட்டு லைலா ரசிகர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

இதையும் படிங்க: எல்லாரும் வேற ரூட்டுனா நம்ம ஒரு ரூட்… தமிழ்நாட்டில் அதிகம் வசூலித்த 5 படத்தில் இவர் படமுமா..?

சூர்யாவுடன் மெளனம் பேசியதே, உன்னை நினைத்து, பிதாமகன் உள்ளிட்ட பல படங்களிலும் நடிகர் அஜித்துடன் தீனா படத்திலும் சியான் விக்ரம் உடன் தில் படத்திலும் நடித்த லைலா முதன் முறையாக நடிகர் விஜய்யுடன் இணைந்து தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், சினேகா, மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், மீனாக்‌ஷி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 68 படத்தில் லைலாவும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

இதையும் படிங்க: அடேங்கப்பா!.. லலித் வண்டவாளம் தண்டவாளம் ஏறப்போகுது?.. திருப்பூர் சுப்பிரமணியம் சவுக்கடி!..

கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படத்திலும் முக்கியமான ரோலில் லைலா நடித்து தமிழ் சினிமாவுக்கு கம்பேக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

திடீரென கேபிஒய் பாலாவுடன் இவ்வளவு நெருக்கமாக லைலா பர்த்டே பார்ட்டியை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியான நிலையில், ஏகப்பட்ட கமெண்ட்டுகளும் லைக்குகளும் குவிந்து வருகின்றன.

Saranya M
Published by
Saranya M