சிவகார்த்திகேயன்:
தற்போது ஒட்டுமொத்த சினிமாவின் பார்வையும் சிவகார்த்திகேயன் மீதுதான் திரும்பி இருக்கிறது. அமரன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய புகழையும் அந்தஸ்தையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அது மட்டுமல்ல சிவகார்த்திகேயன் கரியரில் அமரன் திரைப்படம் தான் பெரிய அளவில் வசூலை வாரி இறைத்து இருக்கிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருப்பார். ஜிவி பிரகாஷ் இசையில் படம் ஒரு ஃபீல் குட் மூவியாக ரசிகர்களிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் கதை என்றாலும் இன்று வரை அனைவரும் மத்தியிலும் ஒருவித தாக்கம் அந்த படத்தின் மீது இருந்துவருகிறது.
70 கோடி ஷேர்:
இந்த படம் ரிலீசாகி தமிழ்நாடு ஷேராக 70 கோடி வந்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் சிவகார்த்திகேயனின் சம்பளமும் அடுத்த படத்திற்கு இனிமேல் 70 கோடியாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. அதற்கேற்ப சிவகார்த்திகேயன் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
அதனால் அந்தப் படத்தில் அவருக்கு 70 கோடி சம்பளம் என தகவல் வெளியானது. ஆனால் அந்தப் படத்தில் ரெவென்யு ஷேர் அடிப்படையில் தான் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறாராம். அதாவது அந்தப் படத்தின் மொத்த ரெவென்யு எவ்வளவு வருகிறதோ அதன் அடிப்படையில் அவருக்கு என ஒரு தனி ஷேர் போய்விடும்.
அஜித்தை மிஞ்சிய சிவகார்த்திகேயன்:
அப்படி அந்த படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் அமரன் திரைப்படத்தின் தமிழ்நாட்டு ஷேர் 70 கோடியாக இருக்கும் பட்சத்தில் விஜய்க்கு போட்டியாக இருக்கும் ஒரே நடிகர் அஜித் என்பது அனைவருக்கும் தெரியும். இதுவரை அஜித்தின் எந்த ஒரு திரைப்படமும் 70 கோடி தமிழ்நாடு ஷேர் பெற்றதாக சரித்திரமே இல்லையாம்.
60 கோடி வரை தான் அஜித்தின் திரைப்படம் தமிழ்நாட்டு ஷேராக வந்திருக்கிறதாம். இதன் மூலம் அஜித்தையே இந்த விஷயத்தில் மிஞ்சி விட்டார் சிவகார்த்திகேயன் என கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் அஜித்தை பொறுத்த வரைக்கும் அவர் அவருடைய இடத்தை அப்படியே தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படத்தை மட்டும் வைத்து இந்த மாதிரி ஒப்பிட்டு பார்க்க முடியாது. இனி வரும் காலங்களில் சிவகார்த்திகேயனின் படம் மேலும் மேலும் அதிக வசூலையும் பெற்றால் தான் அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை நம்மால் யூகிக்க முடியும் என்ற ஒரு கருத்தும் பரவலாக சொல்லப்பட்டு வருகிறது.
Also Read: லப்பர் பந்து நடிகை காட்டுல மழைதான்.. பிச்சுகிட்டு கொட்டும் பட வாய்ப்பு.. அடுத்து இந்த நடிகருடனா?..
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…