நயன்தாரா:
சும்மாவே இருந்திருக்கலாம் நம்ம நயன்தாரா. தேவையில்லாமல் ஒரு பேட்டியில் ரொம்ப தெளிவா பேசுகிறேன் என்ற பேர் வழியில் ஒரு மூன்று பேரை பற்றி கடுமையாக விமர்சித்து இப்போது தொடர்ந்து நயன்தாராவை பற்றிய செய்திகள்தான் அதிகம் வருகின்றது. நயன்தாராவை பொறுத்தவரைக்கும் அவருக்கு என தனி ஸ்ட்ராட்டஜி வைத்திருப்பவர். இதுவும் அந்த ஸ்ட்ராட்டஜியில் அடங்குமா என்று தெரியவில்லை.
அதாவது அவரது மேரேஜ் டாக்குமெண்ட்ரி பற்றி எந்தவித பரபரப்பும் இல்லாத போது திடீரென தனுஷ் பற்றி தேவையில்லாததை பற்றி பேசி பெரிய பக்க அளவில் அறிக்கையை விட்டு டாக்குமெண்ட்ரியின் விளம்பரத்தை தேடிக் கொண்டார். ஆனால் அது வேலைக்கு ஆவல. அந்த டாக்குமெண்ட்ரி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இப்போது ஒரு ஆங்கில ஊடகத்தில் வலைப்பேச்சு சேனலை பற்றி பகிரங்கமாக கருத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.
அதிலிருந்தே இப்போது எந்த யூடியூப் சேனலை பார்த்தாலும் நயன் பற்றிய செய்திதான் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் எப்போது தங்களையும் தங்கள் சேனலையும் நயன் அப்படி சொன்னாரோ அதிலிருந்தே நயன்தாராவை பற்றி பிஸ்மி பேட்டிகளில் அதிகம் பேசி வருகிறார். அதில் சமீபத்தில் அவர் கூறும் போது நயன் தனியாக மானிட்டர் கேட்கிறார் என்ற தகவல் பற்றி கூறியிருந்தார்.
அதாவது படப்பிடிப்பை இயக்குனர் மற்றும் கேமிராமேன் இருவரும் மானிட்டரில் பார்ப்பது வழக்கம்.இதில் நயனும் தன் உதவியாளர்கள் பார்ப்பதற்கு தனியாக மானிட்டர் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதில் நயனை குற்றம் சொல்லமாட்டேன். முதுகெலும்பு இல்லாத தயாரிப்பாளர்கள் கொடுக்கிற இடம் தான் அது. அவர் கேட்டால் எங்களால் தரமுடியாது என்று தயாரிப்பாளரோ இயக்குனரோ சொல்ல வேண்டியதுதானே.
இது சினிமாவிற்கே நடக்கும் அசிங்கம் என பிஸ்மி கூறினார். மேலும் நயன்தாராவை பற்றி இப்படி சர்ச்சைகள் அதிகம் வருவது அவரது திருமணத்திற்கு பிறகுதான். ஒரு வேளை நயன்தாராவால் விக்னேஷ் சிவன் கெட்டாரா இல்லை விக்னேஷ் சிவனால் நயன்தாரா கெட்டாரா என்று பார்க்கும் போது தனுஷை பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்ட பிறகு விக்னேஷ் சிவன் அவரது நண்பர்களிடம் புலம்பியிருக்கிறார்.
அதாவது உங்க அக்கா பேச்சையே கேட்கமாட்டிக்கிறார். அவர் பண்றததான் செய்கிறார் என்றெல்லாம் புலம்பினாராம் விக்னேஷ் சிவன். இதையும் பிஸ்மி அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
Also Read: சீண்டி பாருங்க! ரியாக்ஷன் இனி இப்படித்தான் இருக்கும்.. வெளியான விக்கி-நயன் வீடியோ
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…