தனுஷுடன் மூன்றாவது முறையாக ஜோடி போடும் முன்னணி நாயகி... அட இவங்களா!

புதுப்பேட்டை கூட்டணியான தனுஷ் - செல்வராகவன் கூட்டணி நானே வருவேன் படம் மூலம் மீண்டும் இணைகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதமே தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை ஷூட்டிங் தள்ளிப்போனது.
இந்தநிலையில், படத்தின் ஷூட்டிங் மே மாதத்தில் தொடங்கும் என்று படக்குழுவினர் சொல்லியிருக்கிறார்கள். தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங்குக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸில் இரண்டு மாதங்கள் தனுஷ் இருக்கப் போகிறார். இதனால், அவர் அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் ஷூட்டிங்கைத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதேபோல், ஹீரோயினாக நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். அவர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் இருவரும் இணையும் மூன்றாவது படமாக நானே வருவேன் இருக்கும் எனக் கூறப்படுகிறது.