Connect with us

Cinema News

நான் நல்லா நடிப்பேன்.. யாராவது ஒரு சான்ஸ் கொடுங்க!.. விஜய் பட நடிகைக்கா இந்த நிலைமை?..

விஜய்யின் லியோ படத்தில் நடித்த நடிகை பிரியா ஆனந்த்துக்கு சுத்தமா சினிமா வாய்ப்பே கிடைக்காத நிலையில் பலர் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களை அணுகி வாய்ப்பு கேட்டு வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெய் நடித்த வாமனன் படத்தின் மூலம் கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். புகைப்படம், 180, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, முத்துராமலிங்கம், கூட்டத்தில் ஒருத்தன், எல்கேஜி, காசேதான் கடவுளடா, லியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருவதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: தூள் கிளப்பிய கவின்.. வேறலெவல் நடிப்பு.. ஆனால், அந்த பிரச்சனை இருக்கு ?..’ஸ்டார்’ விமர்சனம் இதோ!

பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள பிரியா ஆனந்த் பல ஆண்டுகளாக அந்த படம் வெளியாகும் என்கிற நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இன்னமும் அந்த படம் வெளியாகவில்லை. அதைப்போல வணக்கம் சென்னை படத்தின் பிறகு மீண்டும் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து அவர் நடித்துள்ள சுமோ திரைப்படமும் தியேட்டருக்கு எப்போது வரும் என்று தெரியவில்லை.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வந்த பிரியா ஆனந்துக்கு பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், கடந்த ஆண்டு விஜய் நடித்து வெளியான லியோ படத்தில் கௌதம் மேனனுக்கு ஜோடியாக நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

இதையும் படிங்க: லிங்குசாமிக்காக யாரும் செய்யாததை செய்த வெற்றிமாறன்! இதைவிட என்ன வேணும்?

ஆனால், அந்த படம் வெளியான பின்னரும் பிரியா ஆனந்துக்கு ஹீரோயின் வாய்ப்பை யாரும் கொடுக்கவில்லை. லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த மடோனா செபாஸ்டின் போல இவரும் வெறும் போட்டோ ஷூட் நடத்தி தீவிரமாக சினிமா வாய்ப்புகளை தேடி அலைந்து வருவதாக கூறுகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top