Connect with us

latest news

தூள் கிளப்பிய கவின்.. வேறலெவல் நடிப்பு.. ஆனால், அந்த பிரச்சனை இருக்கு ?..’ஸ்டார்’ விமர்சனம் இதோ!

லிப்ட், டாடா என வரிசையாக வெற்றிப் படங்களை கொடுத்து வரும் கவின் இந்த ஆண்டு தன்னை ஒரு நல்ல நடிகராக காட்ட வேண்டும் என்பதற்காக இந்த ஸ்டார் படத்தில் நடித்துள்ளார் என்பது தெரிகிறது. சாக்லேட் பாயாகவே சில படங்களை செய்து விட்டு திடீரென ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிவிடலாம் என்கிற எண்ணம் கவினுக்கு கொஞ்சம் கூட இல்லை என்பதை தெளிவாகவே காட்டியுள்ளார். அடுத்து அவர் தேர்வு செய்துள்ள பிளடி பெக்கர் படமும் அதற்கு உதாரணமாகவே உள்ளது.

ராஜா ராணி படத்தில் ஜெய்க்கு அப்பாவாக நடித்திருந்த ஸ்டில்ஸ் பாண்டியனின் மகனான இளன் இயக்கத்தில் கவின், அதிதி போஹன்கர், ப்ரீத்தி முகுந்தன், லால் மற்றும் கீதா கைலாசம் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் நிச்சயம் சினிமா ரசிகர்களை கவரும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

இதையும் படிங்க: லிங்குசாமிக்காக யாரும் செய்யாததை செய்த வெற்றிமாறன்! இதைவிட என்ன வேணும்?

முதல் காட்சியில் மீசையை மறைத்து குழந்தை பருவத்தில் பாரதியாக நடித்து அசத்தும் கவின் கிளைமேக்ஸ் காட்சியில் அவரது கனவை நிறைவேற்றினாரா? அல்லது என்ன ஆனது என்கிற ட்விஸ்ட்டுடன் படத்தை முடித்து அப்ளாஸ் அள்ளுகிறார்.

கையில் காசு இல்லாமல் சினிமா கனவுகளுடன் சொந்த ஊரை விட்டு விட்டு சென்னைக்கு தினம்தோறும் பல இளைஞர்கள் வந்துக் கொண்டு தான் இருக்கின்றனர். ஒரு நாள் நாமும் சாதித்து விட மாட்டோமா என்கிற வெறியுடன் போராடும் ஒவ்வொருவருக்கு பின்னால் இருக்கும் குடும்பமும் அந்த குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்களும் தான் இந்த ஸ்டார் படத்தின் கதையாக உள்ளது.

இதையும் படிங்க: மகளுக்காக 20 நிமிடங்களில் சிவாஜி காட்டிய 36 முகங்கள்… மனுஷன் பின்னிட்டாரய்யா…!

ஒரு நடிகனுக்கு மூலதனமே அவனது முகம் என பார்க்கப்படும் நிலையில், அந்த முகத்துக்கு பிரச்சனை வரக் கூடாது என ஹெல்மெட் எல்லாம் மாட்டிக் கொண்டு சண்டை போடும் காட்சி சூப்பராக உள்ளது. அதே முகத்துக்கு ஒரு கட்டத்தில் பிரச்சனை ஏற்பட நல்லா போக வேண்டிய ஒரு நபரின் வாழ்க்கை தலைகீழாக மாறுவதை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார் இளன்.

கல்லூரியில் காதலிக்கும் பெண்ணாக ப்ரீத்தி முகுந்தன் அளவான நடிப்பை வழங்கி உள்ளார். ஒரு கட்டத்துக்கு மேல் ஹீரோவின் முகத்தில் பிரச்சனை ஏற்பட அவர் டாட்டா காட்டி விட்டு கிளம்ப மெளனம் பேசியதே படத்தில் வரும் லைலா போல இன்னொரு ஹீரோயினான அதிதி போஹன்கர் 2ம் பாதியில் வந்து கவினை துரத்தி துரத்தி காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்.

இதையும் படிங்க: மதுரை முத்துவை இதுவரை யாரும் இந்த கோலத்தில் பார்த்திருக்க மாட்டீங்க! வைரலாகும் வீடியோ

திருமணத்துக்கு பிறகு குடும்ப கஷ்டத்தை புரிந்துக் கொண்டு வேறு வேலைக்கு செல்லும் கவின் கடைசியாக ஸ்டார் ஆக ஆனாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை. படம் முழுவதும் கவின் வேறலெவல் நடிப்பை கொடுத்துள்ளார். ஒவ்வொரு போர்ஷனுக்கு அவரது உடல் தோற்றம் மாறி மாறி காட்டப்பட்டு இருப்பது சிறப்பான விஷயம். ஆனால், ஓவர்டோஸாக குடும்ப கஷ்டத்தை மட்டுமே காட்டிக் கொண்டு படம் பார்க்க வைப்பவர்களை என்டர்டெயின் பண்ணாமல் சோகமான மன நிலைக்கு கொண்டு செல்வதால் மக்களுக்கு இந்த படம் பிடிக்குமா? என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது. அதை மட்டும் சாதித்து விட்டால் நிச்சயம் இந்த ஸ்டார் திரை வானில் ஜொலிக்கும்!

ஸ்டார் – நல்ல முயற்சி

ரேட்டிங் – 3.5

google news
Continue Reading

More in latest news

To Top