Categories: Cinema News latest news

லியோ மண்ணை கவ்வும்… இல்ல என் மீசையை எடுத்துக்கிறேன்.. அண்ணே இப்படியா சொல்லுவீங்க!

Leo Movie: அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற சர்ச்சை தொடங்கியதில் இருந்து ஜெய்லர் ஒரு பக்கம் லியோ ஒரு பக்கம் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது. ஒருவழியாக போட்டியில் ஜெய்லர் தனது இடத்தினை தக்க வைத்துவிட்டது. தற்போதைய நிலையில் அனைவரின் பார்வையும் லியோ பக்கம் திரும்பி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா இணைந்து நடித்திருக்கும் படம் தான் லியோ. அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து இருக்கின்றனர். இதனால் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாகி இருக்கிறது.

இதையும் படிங்க: வாங்கிய ஒரு விருதுக்கும் சண்டையா?.. அல்லு அர்ஜூனுக்கு போட்டியாக நிற்கும் நடிகர்

பட ரிலீஸுக்கு முன்னரே படத்தின் வியாபாரம் 400 கோடிக்கும் அதிகம் என்பதால் படத்தின் வசூல் 1000 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர அந்தஸ்த்தை விஜய் தக்க வைக்க வாய்ப்பு இருக்கும். இதனால் லியோவின் பலரும் நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக அதுகுறித்து பேசி வருகின்றனர். 

ஒரு பக்கம் இதற்கான ட்ரோல்களும் வெளியாகி வருகிறது. வியாபாரமே 400 கோடிக்கும் அதிகம் எனக் கூறப்படும் நிலையில் 600 கோடி வசூல் செய்தால் அது எப்படி ஹிட் படமாகும் என விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் இந்த கடுப்பை ஒரு பக்கம் அதிகமாக காட்டி இருக்கிறார்.

இதையும் படிங்க: புஷ்பா 2 படத்துக்கு வந்த மெகா ஆஃபர்! – ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடி லாபமா?… தலையே சுத்துது!..

லியோ படம் கண்டிப்பாக 1000 கோடி வசூல் செய்யவே செய்யாது. அப்படி வசூல் செய்தால் என் மீசையை எடுத்து கொள்கிறேன். ஜெய்லர் வசூல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. விரைவில் எந்திரன் வசூலையே முறியடிக்கும் போது லியோவால் அதை தொடவே முடியாது எனவும் குறிப்பிட்டார்.

சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் இதை கூறி இருக்கும் அவர் அப்படி நடந்தால் என் ஒரு மீசையை எடுத்து கொள்வதுடன் ஒரு லட்ச ரூபாய் பணம் தருவதாகவும் ஆங்கரிடம் பெட்  கட்டி இருக்கிறார். படத்தின் வசூலை தயாரிப்பாளர் நிர்வாகம் தானே சொல்லணும். இந்த பெட்டுக்காகவாது சொல்லப்படுமா என எதிர்பார்க்கலாம்!

 

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily