புஷ்பா 2 படத்துக்கு வந்த மெகா ஆஃபர்! - ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடி லாபமா?... தலையே சுத்துது!..

தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜூன். பல வருடங்களாக தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவரின் அப்பா பிரபல தயாரிப்பாளராக இருந்ததால் வாரிசு நடிகராகத்தான் சினிமாவில் நுழைந்தார். ஆரம்பத்தில் மொக்கை படங்களில் நடித்தாலும் போகப்போக ஆக்‌ஷன் படங்களில் அதிரடி காட்டி ரசிகர்களை தன் பக்கம் வளைத்தார்.

கடந்த சில வருடங்களாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குறிப்பாக புஷ்பா திரைப்படம் அவரை பேன் இண்டியா அளவில் பிரபலமாக்கியுள்ளது. தெலுங்கில் உருவான புஷ்பா படம் தமிழ், மலையாளம், ஹிந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி அனைத்து மாநிலங்களில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது.

இதையும் படிங்க: வாங்கிய ஒரு விருதுக்கும் சண்டையா?.. அல்லு அர்ஜூனுக்கு போட்டியாக நிற்கும் நடிகர்

இந்த படம் மூலம் அல்லு அர்ஜூன் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமாகிவிட்டார். எனவே, இவர் நடிக்கும் படங்களுக்கு இங்கேயும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த படத்தில் இசையமைத்த தேவி பிரசாத்துக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும், அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது.

இப்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில், முக்கிய வில்லனாக பஹத் பாசில் நடித்து வருகிறார். இந்த படமும் முதல் பாகத்தை போலவே அனைத்து மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. எனவே, இப்படத்தின் வியாபாராம் இப்போது சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

இதையும் படிங்க: ஐயா உங்களுக்கு எல்லாம் இதயமே இல்லியா!.. அல்லு அர்ஜுனையும் விடாது வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!..

ஹிந்தியில் கோல்ட்மைன் டெலிபிலிம்ஸ் என்கிற நிறுவனம் உள்ளது. மற்ற மொழி திரைப்படங்களின் உரிமை இந்நிறுவனம் வாங்கி விற்பனை செய்யும். இந்த நிறுவனம் புஷ்பா 2 படத்தின் அனைத்து மொழி மற்றும் தொலைக்காட்சி, சேட்டிலைட் என அனைத்து உரிமைகளையும் ரூ.1000 கோடிக்கு கேட்டுள்ளதாம்.

புஷ்பா 2 படத்தின் ரூ.425 முதல் 450 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. அப்படி பார்த்தால் படம் வெளியாவதற்கு முன்பே 550 கோடி வரை லாபத்தை இப்படம் பெறும். அதன்பின் தியேட்டர்களில் வெளியானால் எப்படியும் 500 கோடியை தாண்டி இப்படம் வசூல் செய்யும். எனவே, தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை இப்படம் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அட்லீயை வைத்து விஜய் போட்ட ஸ்கெட்ச்.. லியோ ட்ரைலர் ரிலீஸ் எங்க தெரியுமா?

 

Related Articles

Next Story