ஜெய்லர் படத்தின் வெற்றியினை தொடர்ந்து அடுத்த மிகப்பெரிய பட்ஜெட்டில் ரிலீஸாக இருக்கும் லியோ படத்துக்கு அதிக எதிர்பார்ப்புகள் உருவாகி இருக்கிறது. முக்கியமாக லோகேஷ் படம் என்பதால் அவரின் சினிமாட்டிக் யூனிவர்ஸ் கான்செப்ட் இதிலும் பயன்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கைதி படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் இயக்கத்தில் வெளியான படம் தான் விக்ரம். இப்படத்தில் கைதியின் காட்சிகள் கொஞ்சம் இணைக்கப்பட்டு கார்த்தியின் கதாபாத்திரமான தில்லியும் அங்காங்கே காட்டப்பட்டு இருந்தது. இப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து என்னுடைய படங்களில் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்று ஒரு படத்தின் தொடர்பு இன்னொரு படத்தில் இருக்கும் என லோகேஷ் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: சிவாஜியின் நடிப்பில் சந்தேகப்பட்டு சத்யராஜ் கேட்ட கேள்வி! பதிலை கூறி அசரவைத்த திலகம்
லியோ படத்தில் விஜயுடன் விக்ரம் கமல்ஹாசன் மீட்டிங் இருப்பது போல காட்சிகள் அமைக்கப்பட இருக்கிறதாம். கிட்டத்தட்ட 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை காட்சிகள் இருக்கும் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ரோலக்ஸாக விக்ரம் படத்தில் சூர்யா சர்ப்ரைஸ் எண்ட்ரி தான் என்பதால் விக்ரம் கமலும் சர்ப்ரைஸாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: என்னோட வேற முகத்தை லியோ படத்தில் பார்ப்பீங்க… சூப்பர் தகவலை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!
TVK Vijay:…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…