Categories: Cinema News latest news

லியோ பாட்டுக்கே வேட்டு வச்ச சென்சார்… அப்போ படத்துக்கு? அதிர்ச்சியில் படக்குழு!

Censor Board: விஜயின் லியோ படத்தின் நான் ரெடி பாடலின் சென்சார் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதனால் படத்தின்  சென்சார் குறித்து படக்குழுவுக்கு தற்போது பெரிய கவலையை கொடுத்து இருக்கிறது என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கல் எழுந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோர் நடிக்கும் படம் லியோ. இப்படத்தின் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே படத்தின் எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியது. அதிலும் விஜயின் கிளிம்ப்ஸ் காட்சியை பார்த்து வாவ் தட்டியவர்கள் தான் அதிகம்.

இதையும் படிங்க: பிச்சை எடுக்கிறாரு ரஹ்மான்!.. சரியான ஃபிராடு.. டிக்கெட்டுகளை கிழித்து அசிங்கமா திட்டும் ரசிகர்கள்!..

அதை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான ஹரோல்டு தாஸ் கேரக்டரில் நடிக்கும் அர்ஜூன் வீடியோ வெளியாகி இணையத்தினை தெறிக்கவிட்டது. இதை தொடர்ந்து இந்த மாத இறுதியில் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. ட்ரைலரை புர்ஜ் கலீபாவில் நடத்த லலித் திட்டமிட்டு இருக்கிறது.

இந்நிலையில் நா ரெடி பாடலின் சென்சார் சமீபத்தில் நடந்தது. இப்பாடல் ரிலீஸான போதே பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் விஜய் மீது எதிர்ப்பை தெரிவித்தனர். படத்தின் மீது கேஸும் போடப்பட்டது. சென்சார் இப்பாடலில் தற்போது 32 நொடியினை நீக்கி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: ஓவர் நைட்ல ஒபாமா!. படம் ஓட பல கோடி செலவு பண்ண பவர்ஸ்டார்!. அட கொடுமையே!…

பத்தாது பாட்டில் நான் குடிக்க அண்டாவை கொண்டுவா சியேர்ஸ் அடிக்க என்ற வரிகளும், மில்லி உள்ளே போனா கில்லி வெளியே வருவான் போன்ற வரிகளையும் நீக்க உத்தரவிட்டு இருக்கின்றனர்.  

இதனால் லியோ படத்திலும் வெட்டு அதிகமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. ஆனால், சென்சார் போர்ட் சொல்லும் எல்லாத்தையுமே கேட்பார்கள் என்பதால் ஏ சான்றிதழ் கொடுக்கப்படாது. அதிகபட்சம் யூஏ தான் கொடுப்பார்கள் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர். 

Published by
Shamily