Connect with us
lathika movie

Cinema News

ஓவர் நைட்ல ஒபாமா!. படம் ஓட பல கோடி செலவு பண்ண பவர்ஸ்டார்!. அட கொடுமையே!…

பவர் ஸ்டார் என அழைக்கப்படும் ஸ்ரீனிவாசன் தமிழ் சினிமாவின் காமெடி நடிகர் ஆவார். இவர் காமெடி காட்சிகளில் மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் மற்றும் சில படங்களில் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். நிஜ வாழக்கையில் இவர் ஒரு அக்குபஞ்சர் மருத்துவர். இவர் சினிமா மீது கொண்ட பிரியத்தினாலும் மற்றும் தான் எவ்வழியிலாவது பிரபலமாக வேண்டும் என்பதாலும் தனது சொந்த முயற்சியினால் இவர் சினிமாவில் நுழைந்தார்.

தன்னை தானே ஒரு மனிதன் கலாய்த்து கொண்டு மக்களையும் மகிழ்ச்சி அடைய செய்பவர் என்றால் அது பவர் ஸ்டார்தான். இவரின் தோற்றமே நம்மை சிரிக்க வைக்கும் மற்றும் இவரின் காமெடிகள் அதற்கும் மேற்பட்டவை. பார்ப்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

இதையும் வாசிங்க: போடுறா வெடிய!.. மீண்டும் கல்லா கட்ட ரெடியான சன் பிக்சர்ஸ்!.. தலைவர் 171 அதிகாரப்பூர்வ அறிவிப்பு….

இவர் லத்திகா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகானாக அறிமுகமானார். பின் நடிகர் சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் இவர் ஒன்பதுல குரு, யா யா, வாலிபராஜா போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவை தாண்டி நிஜ வாழ்வில் இவர் ஒரு சிறந்த மனிதர். மக்களுக்கு பல வகைகளில் உதவி செய்தவர். சில பிரச்சினைகளால் இவர் சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது இவர் திரில்லர் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவருடைய முதல் படம் லத்திகா. இப்படத்தினை தயாரித்தவரும் இவரே. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மீனாக்‌ஷி கைலாஷ் நடித்திருந்தார். ரஹ்மான் போன்ற முன்னணி நடிகரும் இப்படத்தில் நடித்திருந்தனர். மேலும் இவரே இப்படத்தின் கதாநாயகனும் கூட. இப்படம் 2011ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படம் ஆங்கில படமான பட்டர்ஃபிளை படத்தினை தழுவி இருக்கும்.

இதையும் வாசிங்க:ஆதி குணசேகரனா நானா? இவர் சொல்றத பார்த்தா நமக்கு நெஞ்சுவலி வந்துரும் போல! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா?

மேலும் இப்படம் அவருக்கு மிகுந்த நஷ்டத்தினை ஏற்படுத்துயுள்ளது. ஆனால் இப்படம் திரையரங்குகளில் கிட்டதட்ட 350 நாட்கள் ஓடியுள்ளது. இதற்கு காரணமும் பவர்ஸ்டார்தான். இவர் தனது படத்தினை ஓட வைக்க திரையரங்க உரிமையாளர்களிடம் பேசி தனது படத்தினை பார்க்க வரும் மக்களுக்கு ரூ.100 அன்பளிப்பாக வழங்கினாராம்.

ஏற்கனவே படத்தினை பிரபலமாக்க போஸ்டர்கள், விளம்பரங்கள் என அதிகளவில்  செலவு செய்த பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் இப்படி 350 நாட்களுக்கு சேர்த்து மொத்தமாக ரூ.6கோடி வரை செலவு செய்தார் என சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். ஆனால் என்ன செய்தும் பிரயோஜனம் இல்லாமல் இப்படம் தோல்வியையே சந்தித்தது.

இதையும் வாசிங்க: ஷூட்டிங்கில் ரவிச்சந்திரன் செய்த அட்ராசிட்டி! பொறுத்துக் கொள்ள முடியாமல் பொங்கி எழுந்த ஜெயலலிதா

google news
Continue Reading

More in Cinema News

To Top