Connect with us
vijay

Cinema News

மலேசியாவா?..சென்னையா?.. ஆடியோ லான்ச் எங்கே?.. விஜய் ஃபேன்ஸை குழப்பியடிக்கும் லியோ டீம்!…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ, இந்த படம் விஜய் ரசிகர்களிடையே வெறித்தனமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் என்பதுதான். ஏனெனில், அவர் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தை அவர் எடுத்த விதம்தான்.

அதேபோல், வழக்கம்போல் லோகேஷின் மற்ற படங்களை போல லியோ படமும் ஒரு பக்கா கேங்ஸ்டர் படமாகவே உருவாகி வருகிறது. இப்படத்தில் அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், மிஷ்கின், திரிஷா, கவுதம் மேனன், பாபு ஆண்டனி, அனுராக் காஷ்யப் என பலரும் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: டைட்டில் மட்டுமல்ல ரஜினியின் மாஸ் ஹிட்டும் காப்பி தான்… லியோ படக்கதை இது தானா?

சமீபத்தில் விஜய்தான் சூப்பர்ஸ்டார் என திரையுலகை சேர்ந்த சிலர் பேச துவங்க, அதற்கு ரஜினி ரசிகர்கள் எதிர்வினையாற்ற, ஜெயிலர் பட விழாவில் ரஜினி பருந்து – காக்கா கதையை சொல்ல, அது விஜய் ரசிகர்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்துவிட்டது. ஜெயிலர் படம் இப்போது ரூ.500 கோடி வசூலை பெற்றுவிட்டதால், லியோ படம் வெளியாகி ஜெயிலர் வசூலை காலி செய்ய வேண்டும் என விஜய் ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

மேலும், ரஜினியின் பருந்து – காக்கா கதைக்கு பதிலடி கொடுக்கும்படி லியோ பட ஆடியோ விழாவில் விஜய் எதாவது பேசுவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அல்லது பேசவேண்டும் என ஆசைப்படுகிறார்கள். இதற்கிடையே லியோ படத்தின் ஆடியோ விழாவை எங்கே நடத்துவது என்பதிலேயே இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது.

இதையும் படிங்க: சும்மா கிடங்கப்பா! வரலாற்றில் முத்திரை பதிச்சாச்சு – ‘லியோ’ படத்தால் விஜய் செய்த சாதனை

வழக்கமாக விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழா சென்னையில்தான் நடக்கும். முதலில் ‘இந்த முறை மதுரை’ என செய்திகள் வெளியானது. அதன்பின் இந்தியாவிலேயே இல்லை.. மலேசியா அல்லது துபாய் என சொல்லப்பட்டது. இப்போது மலேசியா இல்லை.. சென்னையில்தான் நடக்கப்போகிறது என செய்திகள் வெளியாகியுள்ளது.

மொத்தத்தில் லியோ ஆடியோ லான்ச் எங்கு நடக்கப்போகிறது என்பதில் இன்னமும் குழப்பம் நீடிக்கிறது.

இதையும் படிங்க: என்னோட வேற முகத்தை லியோ படத்தில் பார்ப்பீங்க… சூப்பர் தகவலை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

Continue Reading

More in Cinema News

To Top