LIK 5th day Box office: ரசிகர்களை ஏமாற்றியதா எல்ஐகே?- 5ம் நாள வசூல் நிலவரம்

 
LIK 5th day Box office: ரசிகர்களை ஏமாற்றியதா எல்ஐகே?- 5ம் நாள வசூல் நிலவரம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் எல்ஐகே. கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் வெளிவந்துள்ள இந்த படம் சுவாரஸ்யமில்லாத திரைக்கதை அமைப்பால் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

2040ம் ஆண்டுகளில் கேட்ஜெட்கள் இளைஞர்களின் வாழ்க்கையில் எப்படி எல்லாம் நுழைகிறது எனபதௌதான் படத்தின் மைஅ கதை. ஆனால் திரைக்கதை அதனை விட்டு விலகி எஸ்.ஜே.சூர்யாவுக்கும் பிரதீப்புக்குமான போட்டியாக மாறி வேறு திசையில் பயணிக்கிறது. அதுவும் பல காட்சிகள் இப்படித்தான் இருக்கும் என்று நாம் யூகிக்கும் அளவிலேயே இருப்பதால் படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் எல்ஐகே படத்தின் 5ம் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று தமிழ் புத்தாண்டு விடுமுறை தினம என்பதால் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பர்க்கப்பட்ட நிலையில் 3,859 காட்சிகள் நடைபெற்ற நிலையில் நெட் தொலை ரூ. 4.15 கோடி வசூல் செய்துள்ளது. இதுவரை மொத்தமாக நெட் தொகை ரூ. 29.65 கோடியாகவும் , மொத்த வசூல் ரூ.34.27 கோடியாகவும் உள்ளது. நேற்றைய வசூலை பொறுத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றே கூறப்படுகிறது.

From Around the web