
Cinema News
கமலுக்கே டஃப் கொடுத்த இயக்குனர்! ஹாலிவுட்டை தமிழுக்கு கொண்டு வந்தவர்… யார் தெரியுமா?
Published on
By
தமிழ் சினிமாவில் வழக்கமான திரைப்படங்கள் போல் அல்லாமல் வித்தியாசமான திரைப்படங்களை கொண்டு வருவதற்கு சில இயக்குனர்கள் அதிகமாக முயற்சித்தனர். அதில் கமல்ஹாசனும் முக்கியமானவர். அவர் தமிழ் சினிமாவில் பிரபலமான கதாநாயகனாக இருந்தபோது ஹாலிவுட் பெரும் வளர்ச்சியை கண்டது.
எனவே ஹாலிவுட் போன்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வர வேண்டும் என ஆசைப்பட்டார் கமல்ஹாசன். அதனால்தான் அவ்வை சண்முகி, ஆளவந்தான் மாதிரியான படங்களுக்கு கமல் அப்போது ஆதரவளித்தார்.
kamal1
அப்போது இயக்குனராக இருந்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவும் அதே மனநிலையில் இருந்தார். இதனால் கமலுக்கும் இவருக்கும் நட்பு ஏற்பட்டது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் மாற்று கதைகளை படமாக்கினார் ஸ்ரீனிவாச ராவ்.
தமிழில் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், லிட்டில் ஜான் போன்ற படங்களை இவர் படமாக்கியுள்ளார். இவரது ஒவ்வொரு படத்திலும் சுவாரஸ்யமான விஷயம் இருப்பதை பார்க்க முடியும்.
மைக்கேல் மதன காம ராஜன் திரைப்படத்தில் மொத்தம் நான்கு கமலை வைத்து படம் செல்லும். லிட்டில் ஜான் திரைப்படத்தில் ஜான் என்கிற இளைஞன் எறும்பு அளவிற்கு குட்டியாகிவிடுவான். அதை வைத்து கதை செல்லும். அதே போல பிரபுவை வைத்து இவர் இயக்கிய சின்ன வாத்தியார் என்கிற திரைப்படத்தில் பிரபு செய்யும் ஆராய்ச்சியால் அவரது ஆத்மா கூடு விட்டு கூடு பாய்ந்துவிடும்.
singeetham srinivasa rao
அதே போல ஹாலிவுட்டில் வெளிவந்த பேக் டூ தி ஃப்யூச்சர் என்கிற திரைப்படத்தின் கதையை கொண்டு ஒரு காலப்பயணம் திரைப்படத்தை இவர் தெலுங்கில் எடுத்துள்ளார். இப்படியான கதைகளை அப்போதெல்லாம் இந்திய சினிமாவில் எடுப்பதற்கே யோசித்துக்கொண்டிருந்தனர்.
ஆனால் தொடர்ந்து மாற்று சினிமாவை தமிழ் சினிமாவிற்குள் கொண்டு வந்துள்ளார் இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்.
இதையும் படிங்க: ‘அன்பே வா’ படத்தில் எம்ஜிஆருக்கு ஏற்பட்ட அவமானம்! – தன் செயல் மூலம் பதிலடி கொடுத்த புரட்சித்தலைவர்
சர்ச்சை நாயகன் பாலா : kpy பாலா மீது பல சர்ச்சைகள் அவரை சுற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பாலா...
Ajith Vijay: தமிழ் சினிமாவில் எப்படி எம்ஜிஆர் – சிவாஜிக்கு பிறகு ரஜினியும் கமலும் பல சாதனைகள், வெற்றிகளை குவித்து வந்தார்களோ...
சிம்புவுடன் இணைந்த வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் முக்கிய, அதே சமயம் சிறந்த இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இத்தனைக்கும்...
வடிவேலுவின் கோபம் : தற்போது சமூக வலைதளங்களில் வைகைப்புயல் வடிவேலுதான் பேசும் பொருளாக மாறி உள்ளார். அதற்கு காரணம் சமீபத்தில் அவர்...
தனுஷை வைத்து பல படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில்...