Connect with us
mgr

Cinema History

‘அன்பே வா’ படத்தில் ஏற்பட்ட அவமானம்! – செயல் மூலம் பதிலடி கொடுத்த எம்.ஜி.ஆர்

தமிழ் திரை உலகில் ஒரு ஒப்பற்ற நடிகராகவும் அரசியலில் ஒரு மாபெரும் தலைவராகவும் திகழ்ந்து வந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். இவர் ஆற்றிய பணிகள் ஏராளம் .மக்களுக்கு செய்த உதவிகள் ஏராளம் . அதனாலேயே அரசியலில் நீடித்து இருக்க முடிந்தது.

mgr1

எம்ஜிஆரை வைத்து ஏகப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் பல படங்களை தயாரித்து இருக்கின்றனர். ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு பாரம்பரிய தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் ஏவிஎம் நிறுவனம் எம்ஜிஆரை வைத்து ஒரே ஒரு திரைப்படத்தை மட்டும் தான் தயாரித்திருக்கின்றது.

அந்தப் படம் தான் ஏசி திரிலோக சந்தர் இயக்கத்தில் வெளிவந்த அன்பே வா திரைப்படம். இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்திருந்தார். மேலும் நாகேஷ், மனோரமா, அசோகன் என பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

mgr2

mgr2

எம்ஜிஆருக்கு உரிய பாணியில் முற்றிலும் வித்தியாசமாக வெளிவந்த படம் தான் அன்பே வா திரைப்படம். முற்றிலும் காதல் கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் ஒரே ஒரு சண்டைக் காட்சி மட்டும் தான் இருக்கும் .மேலும் வழக்கமாக இருக்கும் சண்டை காட்சிகள் இந்தப் படத்தில் இருக்காது. அதனாலேயே எம்ஜிஆர் என்றாலே சண்டை காட்சிகள் தான் என்று ரசிகர்கள் ஆசைப்படுவார்கள் என்பதற்கு இணங்க இயக்குனர் ஒரே ஒரு சண்டைக்காட்சியை இந்த படத்தில் வைத்தார்.

அந்த சண்டைக் காட்சியில் 120 கிலோ எடை கொண்ட ஒரு நடிகரை எம்ஜிஆர் தூக்க வேண்டும். தூக்கி மூன்று முறை சுற்றி கீழே போட வேண்டும். இதை சுற்றி இருந்தவர்கள் நம்ம ஊர் நம்பியார் என்றால் எம்ஜிஆர் தூக்கி விடுவார். இவரை எப்படி தூக்க முடியும்? என கிண்டலும் கேலியும் ஆக பேசிக் கொண்டிருந்தது எம்ஜிஆரின் காதுக்கு சென்று இருக்கிறது.

mgr3

mgr3

உடனே எம்ஜிஆர் தன்னுடைய வழக்கமான உடற்பயிற்சியை இன்னும் தீவிர படுத்தினார்.பளு தூக்குவது கர்லா கட்டை சுழற்றுவது என தனது உடற்பயிற்சியை மிக தீவிர படுத்தினார். அந்த காட்சியிலும் அந்த 120 கிலோ எடை கொண்ட அந்த நடிகரை தன் இரண்டு கைகளால் தலைமேல் தூக்கி மூன்று முறை சுற்றி ரசிகர்களின் வாயை அடைத்தார் எம்ஜிஆர். தன்னைக் கிண்டல் செய்தவர்களை தன் செயல்களின் மூலம் பதிலடி கொடுத்தார் எம்ஜிஆர்.

google news
Continue Reading

More in Cinema History

To Top