Connect with us
ajith

Cinema News

அஜித்தின் உடல் எடையை வச்சு பாட்டு எழுத சொன்னாங்க! அதான் அந்த பாட்டு.. இதுல இப்படி ஒரு அர்த்தமா?

Ajith: கோலிவுட்டில் ஒரு மாஸ் ஹீரோவாக இருந்து வருபவர் நடிகர் அஜித். இவருக்கு என ஒரு தனி கிரேஸ் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஏராளமான ரசிகர் பட்டாளத்துடன் வலம் வரும் அஜித் ஒரு ஆக்சன் ஹீரோவாக சமீபகாலமாக தன்னை பிரதிபலித்துக் கொண்டு வருகிறார். தற்போது குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக  நயன் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இன்னொரு பக்கம் விடாமுயற்சி படத்திலேயும் பிஸியாக நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தை எப்படியாவது தீபாவளி அன்று ரிலீஸ் செய்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் படத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜயை பற்றி சரியாக கணித்த ரகுவரன்! ஒரு தீர்க்கதரசிதான்.. என்ன சொன்னார் தெரியுமா?

குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அஜித்தை பொருத்தவரைக்கும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றால் படத்திற்காக தன்னுடைய உடல் தோற்றத்தையும் முக தோற்றத்தையும் படத்தின் கதைகளுக்கு ஏற்ப மாற்றக்கூடிய நடிகர்கள் மத்தியில் அஜித் என்னுடைய ஒரிஜினாலிட்டியை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று இப்போது வரைக்கும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அதே கெட்டப்பில் நடித்து வருபவர்.

இந்த நிலையில் அவர் மிகவும் ஸ்லிம்மாக தோன்றி நடித்த படம் என்றால் அது பரமசிவன் படத்தில் தான். யாரும் எதிர்பார்க்காத விதமாக அந்தப் படத்தில் மிகவும் ஒல்லியாக நடித்திருப்பார் அஜித். அந்தப் படத்தில் வரும் ஒரு சூப்பர் ஹிட் பாடல்  ‘ஒரு கிளி’ என்ற பாடல். இந்த பாடல் வரிகளை எழுதியவர் யுகபாரதி. இந்த பாடலில் அஜித்தின் உடல் இளைச்சதை குறித்து ஒரு வரி இடம்பெற வேண்டும் என படத்தின் இயக்குனர் கேட்டாராம்.

இதையும் படிங்க: ரஜினி பட பாட்டை ஆட்டைய போட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!.. எஸ்.கே 23 பட தலைப்பு இதுதானாம்!..

ஆனால் யுகபாரதி  ‘சங்க இலக்கியத்தில் ஒரு பெண் இளைத்தால் அதை பசலை நோய் என்று சொல்வார்கள். இதுவே ஆண் இளைத்ததை பற்றி எழுதினால் அதை பலவீனம் என்று சொல்வார்கள். அதனால் அப்படி எழுத மாட்டேன்’ என்று சொன்னாராம் யுகபாரதி. ஆனாலும் இயக்குனரின் கட்டாயத்தின் பேரில்  ‘நான் காதலோடு தோழனான சேதி அறிவாயோ’ என ஆண் பாடுவது போல எழுதி இருக்கிறார் யுகபாரதி. அதற்கு உண்மையான அர்த்தம் என்னவெனில்  ‘காதல் வந்ததால் நான் சரியா சாப்பிடாம உடல் இளைச்சிடுச்சுன்னு’ என்பது பொருள் என யுகபாரதி ஒரு பத்திரிகை பேட்டியில் கூறியிருக்கிறார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top