">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
லாக்டவுன் எனக்கு இதைத்தான் கற்றுத்தந்தது – சமந்தா ஓபன் ஸ்டேட்மெண்ட்!
கொரோனா ஊரடங்கு என்பதால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாவில் முட்டைகோஸ் அறுவடை செய்த புகைப்படத்தை வெளியிட்டு “இதற்கு முன்னர் என்னிடம் உங்களது பொழுதுபோக்கு என்றவென்று மக்கள் கேட்டால், சினிமா என்று தான் சொல்வேன். உடனே அது உங்கள் தொழில். பொழுதுபோக்கு என்னவென்று சொல்லுங்கள் என்று கேட்கும்போது நான் பதில் சொல்ல முடியாமல் திணறினேன். ஆனால் இப்போது என்னுடைய பொழுதுபோக்கு என்னவென்று கண்டு பிடித்துவிட்டேன். என் வீட்டு மாடியில் காய்கறி செடிகளை வளர்ப்பதுதான் என்னுடைய பொழுதுபோக்கு’ என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் சமந்தா