Categories: latest news throwback stories

லோகேஷ் கனகராஜ் இப்போ யாரோட சுத்துறாரு தெரியுமா?.. ரஜினிகாந்த் ரசிகர்கள் பார்த்தா காண்டாகிடுவாங்களே!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தை அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக தனது நண்பர்களுடன் சபரி மலை கோயிலுக்கு லோகேஷ் கனகராஜ் சென்றுள்ளார். அதன் புகைப்படங்களை தற்போது ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

லியோ படத்தின் வெற்றி விழாவில் ரஜினிகாந்துக்கு எதிராக ரத்னகுமார் பேசியதாக விஜய் ரசிகர்கள் கொண்டாட ரஜினிகாந்த் ரசிகர்கள் ரத்னகுமாரை போட்டு பொளந்தனர். தலைவர் 171வது படமான கூலி படத்தில் ரத்னகுமார் பணியாற்றவே கூடாது என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், லோகேஷ் படத்தில் கண்டிப்பாக மீண்டும் ரத்னா பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: வானவில் குளியல் போட்ட இறுகப்பற்று ஹீரோயின்!.. சானியா ஐயப்பனை இப்படி பார்க்க கண்ணெல்லாம் கூசுதே!..

ஆனால், ரஜினிகாந்த் தரப்பில் இருந்தே ரத்னகுமார் பணியாற்றக் கூடாது என கூறியதாகவும் ரத்னகுமாருக்கு பதிலாக வேறு ஒரு இயக்குநரை துணைக்கு கொண்டு லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஸ்ருதிஹாசன் உடன் ஜோடி போட்டு இனிமேல் பாடலில் லோகேஷ் கனகராஜ் நடித்த நிலையில், ஸ்ருதிஹாசன் தனது காதலரை பிரிவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு லோகேஷ் கனகராஜ் காரணம் என்பது போல கிசுகிசுக்கள் கிளம்பின.

இதையும் படிங்க: நின்னு போன படம்! ரஜினி கேமியோ ரோலில் நடித்து 100 நாளை தாண்டி ஓடிய சம்பவம்

இந்நிலையில், அதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக சபரி மலைக்கு சமத்துப் பிள்ளையாக சென்று சாமி தரிசனம் செய்து வந்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். கார்த்திகை மாதம் எல்லாம் கூட்டம் களைகட்டும் என்பதால் இந்த மாதத்தில் சென்று வந்திருப்பதாக தெரிகிறது.

லியோ படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக ரத்னகுமாருடன் திருப்பதிக்கு லோகேஷ் கனகராஜ் சென்று வந்த நிலையில், தற்போது ரத்னகுமாருடன் ஜோடி போட்டு சபரி மலைக்கு லோகேஷ் கனகராஜ் சென்றிருக்கிறார்.

இதையும் படிங்க: கண்ட்ரோல் இருந்தா பாருங்க!… லாங் கவுனில் மொத்த அழகையும் காட்டும் ஷிவானி…

Saranya M
Published by
Saranya M