Connect with us

Cinema News

ஜெயிலர் வசூலை முந்த பிரஷர் கொடுத்த லியோ தயாரிப்பாளர்!.. ஒரே வார்த்தையில் வாயை மூட வைத்த லோகேஷ் கனகராஜ்!..

லியோ படத்துக்கு நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பு நிறுவனம் எந்தவொரு புரமோஷனும் செய்யப் போவதாக தெரியவில்லை என நினைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தானே தனது படத்திற்காக களத்தில் இறங்கி ஒவ்வொரு யூடியூப் சேனலுக்காக பேட்டி கொடுத்து வருகிறார்.

லலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலி கான், மிஸ்கின், கெளதம் மேனன், சாண்டி, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது.

இதையும் படிங்க: சூப்பர் ஹிட் படத்தை இயக்க வந்த வாய்ப்பு!.. இரண்டு முறையும் மறுத்த மனோபாலா.. அட அந்த படமா?!..

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாத நிலையில், வேறு எந்த புரமோஷனும் தயாரிப்பு தரப்பு நடத்தாது என்றும் விஜய் ரசிகர்கள் சமீபத்தில் ரோகிணி தியேட்டரில் நடந்த சம்பவமே தெளிவாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், லியோ படத்திற்கான புரமோஷனுக்காக லோகேஷ் கனகராஜ் பேட்டி அளித்து வரும் நிலையில், உறுதியாக இந்த படம் எல்சியூவா இல்லையா? என்பதை எங்கேயும் ரிவீல் செய்யவே இல்லை.

இதையும் படிங்க: என்னப் போய் இப்படி சொல்லலாமா? சவால் விட்ட விக்ரமால் படப்பிடிப்பில் அழுத லைலா – நடக்குற காரியமா?

மேலும், படத்தில் அறிவிக்காத ஒரு ஸ்பெஷல் காஸ்ட் இருப்பது உறுதி என்றும் நடிகர் விஜய் டூப் போடாமல் சண்டை காட்சிகளில் நடித்தது உள்ளிட்ட பல விஷயங்களை கூறி விஜய் ரசிகர்களை லியோ படத்துக்கு தயார் படுத்தி வருகிறார்.

ஜெயிலர் படத்தின் வசூலை லியோ ஒரே வாரத்தில் முறியடித்து விடும் என விஜய் ரசிகர்கள் தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், அதுகுறித்த கேள்வியை பரத்வாஜ் ரங்கனும் முன் வைத்தார். அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளர் லலித் அந்த மீம்ஸை எல்லாம் காட்டி லியோ வசூல் ஜெயிலர் வசூலை முந்திடணும்னு சொல்வார்.

இதையும் படிங்க: இத்தனை ஹிட் படங்களில் வாய்ப்பு வந்தும் மிஸ் பண்ணியிருக்காரா ஜெய்!.. லிஸ்ட்டு பெருசா போகுதே!..

நான் பதிலுக்கு சிரித்துக் கொண்டே, இன்னொரு மீம்ஸில் நீங்க எனக்கு ஹெலிகாப்டர் வாங்கித் தருவதாகவும் வந்தது, அதை நீங்க பார்த்தீங்களா என சொன்னவுடன் சைலன்ட் ஆகிடுவார் என பேசியுள்ளார். லியோ படம் ஜெயிலர் வசூலை முந்தும் என்கிற நம்பிக்கை லோகேஷுக்கே இல்லையே என ரஜினி ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top