Categories: Cinema News latest news

கமலுக்கு மன்சூர் அலிகான்… விஜய்க்கு சத்யராஜா? லோகேஷின் ஸ்கெட்சே செம ஸ்பெஷல் தான்..!

Leo Movie: லோகேஷ் கனகராஜ் தன்னுடைய லியோ படத்தின் வேலைகளில் படுபிஸியாக இருந்து வருகிறார். அப்படத்தினை பற்றியும் சுவாரஸ்ய தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டே இருக்கிறது. தற்போது ஒரு முக்கிய தகவல்கள் இணையத்தில் வைரலானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் லியோ. மாநகரம் தொடங்கி சமீபத்தில் ரிலீஸான விக்ரம் வரை எல்லா படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் விக்ரம் படம் கமலின் திரை வாழ்க்கையையே புரட்டி போட்டது. பல வருடங்களுக்கு பிறகு அவரின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.

இதையும் படிங்க: விஜய் ரசிகர்களை விட மோசமால இருக்காங்க கமல் ஃபேன்ஸ்… பிரபலத்தையே அசிங்கப்படுத்திய நிகழ்வு..!

இதனால் கோலிவுட்டிலும் லோகேஷின் ஆட்டம் தொடங்கியது. எல்லா இயக்குனர்களுமே அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என விரும்பினார். இதில் முதல் ஆளாக முந்திக்கொண்ட விஜய் அவரின் லியோ படத்தில் களமிறங்கினார்.

அடுத்தடுத்து சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி, கைதி 2, விக்ரம் 3, லியோ 2 என மொத்தமே தன்னுடைய சினிமா கேரியரில் 10 படங்களை மட்டுமே இயக்க போகிறார் லோகேஷ் என்ற ஒரு தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: விஜய் காப்பி அடிக்கும் அந்த நடிகரே செஞ்சிருக்காரு… அப்போ இந்த விஷயத்துலையும் செய்றது தானே சரி..!

மேலும் லோகேஷ் தன்னுடைய படங்களில் எல்லாவற்றிலுமே ஒரு ரெட்ரோ பாடலை வைத்து ஹிட் கொடுத்து விடுவார். கைதி மற்றும் மாஸ்டர் என இரண்டு படங்களில் வைத்த போது வரவேற்பு சுமாராக இருந்தாலும், விக்ரம் படத்தில் சக்கு சக்கு வத்திக்குச்சி பாடல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இதனால் அந்த பாடல் மீண்டும் வைரலானது. இந்நிலையில் லியோ படத்தில் அப்படி ஒரு பாடலை கண்டிப்பாக லோகேஷ் வைத்து இருப்பார். அந்த பாடல் சத்யராஜின் வில்லாதி வில்லன் படத்தின் தீம்தலக்கடி தில்லாலே பாடலாக தான் இருக்கும் என்ற ஒரு தகவல் கசிந்துள்ளது. லோகேஷும் இந்த பாடல் தனக்கு பிடிக்கும் என ஒருமுறை பேட்டியில் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily