விஜய் காப்பி அடிக்கும் அந்த நடிகரே செஞ்சிருக்காரு… அப்போ இந்த விஷயத்துலையும் செய்றது தானே சரி..!

Vijay: தளபதி விஜய் எப்போதுமே தன்னுடைய ரசிகர்களுடன் ஒரு கனெக்ட்டில் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த சேதி தான். ரசிகர்களை தன் சகோதர்கள் என ஒவ்வொரு பேட்டியிலும் அவர் கொடுத்த அடையாளம் தான் அவரை இவ்வளவு கூட்டம் ஃபாலோ செய்து வருகிறது.

தற்போது அவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் லியோ படத்தின் ரிலீஸ் வரும் 19ந் தேதி நடக்க இருக்கிறது. இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்க லலித்குமார் தயாரித்து இருக்கிறார். படத்தின் ஆடியோ ரிலீஸுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தது பெரிய வருத்தமாக இருந்தது.

இதையும் படிங்க: ஹீரோயின்ஸ் பாத்தா கொத்திட்டு போய்டுவாங்க!.. லண்டனில் ஸ்டைலீஸ் லுக்கில் ஊர் சுற்றும் சிம்பு!..

இதனால் தியேட்டர்களே 30 நாட்களுக்கும் விஜயின் ஹிட் படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்து கல்லா கட்டலாம் என ப்ளான் செய்தது. அந்த லிஸ்ட்டில் லியோ படத்தின் ட்ரைலரை ரோகிணி திரையரங்கில் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த ட்ரைலர் முடிந்த கையோடு தியேட்டரையும் நாசமாக்கி விட்டனர் ரசிகர்கள்.

மொத்த சீட்களும் உடைக்கப்பட்டு பார்க்கவே அதிர்ச்சியான ஒரு தகவலாக இருந்தது. இதை மாதிரி இந்தியாவில் நடந்து இருக்கா என விசாரிக்கும் போது மகேஷ் பாபுவின் ரசிகர்களும் ஒருமுறை எதோ பிரச்னையில் தியேட்டரில் உள்ளே புகுந்து மொத்தமாக சூரையாடி விட்டனர்.

இதையும் படிங்க: விஜய் ரசிகர்களை விட மோசமால இருக்காங்க கமல் ஃபேன்ஸ்… பிரபலத்தையே அசிங்கப்படுத்திய நிகழ்வு..!

ஆனால் இந்த பிரச்னை மகேஷ் பாபு காதுக்கு போன கையோடு அதற்குரிய நஷ்ட தொகையை கொடுத்து மன்னிப்பும் கேட்டு விட்டாராம். ஆனால் விஜய் இதுவரை இந்த சர்ச்சை குறித்து வாயே திறக்கவில்லை. ரோகிணி திரையரங்கில் இந்த சேதாரத்தால் 20 லட்சம் வரை செலவு ஆகும் எனக் கூறப்படுகிறது.

மன்னிப்பே கேட்காதவர் நஷ்டஈடா தரபோறார் எனப் பல தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது. ட்ரைலரால் பரவா இல்லை. பட டைமில் இதை செய்து இருந்தால் மொத்த வியாபாரமும் படுத்து இருக்குமே என தியேட்டர் தரப்பிலும் கண்டன குரல்கள் எழுந்துள்ளன.

 

Related Articles

Next Story