ஹீரோயின்ஸ் பாத்தா கொத்திட்டு போய்டுவாங்க!.. லண்டனில் ஸ்டைலீஸ் லுக்கில் ஊர் சுற்றும் சிம்பு!..
Actor STR: சிறுவனாக இருக்கும் போதிலிருந்தே சினிமாவில் நடித்து வருபவர் சிலம்பரசன். ஷார்ட்டாக சிம்பு என அழைத்து இப்போது STR ஆகிவிட்டார். துவக்கத்தில் அப்பா டி.ராஜேந்தர் இயக்கத்தில் நடிக்க துவங்கி அவராலேயே ஹீரோவாகவும் மாறினார். துவக்கத்தில் அப்பா சொன்னது போல நடித்தாலும் போகப்போக தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.
ரஜினியை காப்பி அடித்த சிம்பு அவரை போல பல உடல் மொழிகளையும், ஸ்டைலையும் காட்டி தன்னை லிட்டில் சூப்பர்ஸ்டார் என அழைத்துக்கொண்டார். நன்றாக குத்து நடனம் ஆடுவார். இவருக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. சினிமாவை போலவே நிஜ வாழ்விலும் இவர் மன்மதன்தான். முதலில் ஒரு நடிகரின் மகளை காதலித்தார். அதன்பின் நயன்தாராவை காதலித்தார்.
இதையும் படிங்க: சாரி என்னால முடியாது.. சிம்பு படத்திற்கு இசையமைக்க மறுத்த அனிருத்!. அட அவர்தான் காரணமா?!..
இருவரும் லிப்லாக் கொடுத்து கொள்ளும் புகைப்படம் கூட வெளியானது. அந்த காதல் பிரேக்கப் ஆனது. அதன்பின் நடிகை ஹன்சிகாவை காதலித்தார். சில மாதங்களில் அதுவும் பிரேக்கப் ஆகி கண்ணீர் விட்டார். 40 வயதை தாண்டியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார்.
சமீபகாலமாக ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக காணப்படுகிறார். பல கோவில்களிலும் இவரை பார்க்க முடிகிறது. ஒருபக்கம் குண்டான உடலை இளைத்து மாநாடு படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். அதன்பின் வெளிவந்த வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
இதையும் படிங்க: சாரி சார் என்னால நடிக்க முடியாது!.. மணிரத்னம் – கமல் படத்திலிருந்து சிம்பு விலகியதன் பின்னணி…
அதேபோல், அட்வான்ஸ் வாங்கிவிட்டு சில தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுக்கமால் இருக்கும் பஞ்சாயத்தும் இவர் மீது ஓடிகொண்டிருக்கிறது.. சமீபத்தில் கூட வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனர் ஐசரி கணேசன் சிம்பு மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சிம்பு ரூ.1 கோடியை நீதிமன்றத்தில் கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வந்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஆனால், சிம்புவோ எதையும் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் ஜாலியாக வெளிநாடுகளில் ஊர் சுற்றி வருகிறார். இந்நிலையில், லண்டனில் ஸ்டைலீசான லுக்கில் சிம்பு ஊர் சுற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: தனுஷா? சிம்புவா? விஷாலா? அதர்வாவா? என்ன இழுத்துக்கிட்டு எல்லாருக்குமே ரெட் கார்டு தான்!