சாரி சார் என்னால நடிக்க முடியாது!.. மணிரத்னம் - கமல் படத்திலிருந்து சிம்பு விலகியதன் பின்னணி...

KH234: தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் இணைந்து நடிப்பது என்பது சில இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடக்கும். மணிரத்னம், பாலா போன்ற இயக்குனர்கள் இதை தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஆனால், தன்னை மாஸாக காட்ட விரும்பும் நடிகர்கள் ஷோலோ ஹீரோவாக மட்டுமே நடிக்க ஆசைப்படுவார்கள்.

இயக்குனர் பாலாவுக்காக சூர்யாவுடன் இணைந்து பிதாமகன் படத்தில் நடித்த விக்ரம் அதன்பின் சூர்யாவுடன் நடிக்கவில்லை. மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, ராவணன் ஆகிய படங்களில் சில நடிகர்கள் இணைந்து நடித்தனர். அதேபோல், மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்திலும் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு உள்ளிட்ட சில நடிகர்கள் இணைந்து நடித்தனர்.

இதையும் படிங்க: கூட்டத்துல கட்டுச்சோத்த அவுத்த மேக்கப் மேன்!.. லீக்கான KH 234 ரகசியம்.. கடுப்பான கமல்ஹாசன்?..

அதேபோல், கமலின் விக்ரம் படத்தில் பஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருந்தனர். விஜயின் மாஸ்டர் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். ரஜினி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ஜெயிலர் படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும், கன்னட சூப்பர்ஸ்டார் சிவ்ராஜ்குமாரும் கேமியோ வேடத்தில் நடித்திருந்தனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய், அர்ஜூன், சஞ்சய் தத் என பலரும் நடித்து வருகிறார்கள். எனவே, இது கோலிவுட்டில் இது டிரெண்டாகவே மாறிவிட்டது. மணிரத்னம் அடுத்து கமலை வைத்து இயக்கவுள்ள புதிய படத்தில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இப்படத்தில் முதலில் சிம்பு நடிக்கவிருந்தார். ஆனால், கலெக்டர் வேடம் என்பதால் தாடியெல்லாம் சேவ் செய்து முடியை வெட்ட வேண்டும் என மணிரத்னம் சொல்லிவிட்டார். ஆனால், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிப்பதற்காக தலைமுடி மற்றும் தாடி வளர்த்திருப்பதால் அதை வெட்டமுடியாது எனக்கூறி அப்படத்திலிருந்து சிம்பு விலகிவிட்டாராம். அதன் பின்னரே அந்த வேடத்திற்கு துல்கர் சல்மானை ஒப்பந்தம் செய்துள்ளார் மணிரத்னம்.

இதையும் படிங்க: தேவர் மகனில் கமல் செய்த சித்து வேலை!.. கண்டுபிடிச்சி திட்டிய சிவாஜி!.. நடந்தது இதுதான்!..

Related Articles
Next Story
Share it