ரஜினியின் பொன்விழா ஆண்டில் மகுடம் சூட்டப்போகும் லோகேஷ்! நடத்தப் போறது யார் தெரியுமா?
Jan 8, 2024, 16:49 IST
Actor Rajinikanth: இன்று ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கே ஒரு பெருமை சேர்க்கும் நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அவரை பார்க்கவும் ரசிக்கவும் இன்றுவரை ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அவர் சினிமாவிற்கு வந்து 50வருடங்கள் ஆக போகின்றது. 1975 ஆம் ஆண்டில் சினிமாவில் நுழைந்த ரஜினி இன்று வரை அதே வேகத்துடனும் ஸ்டைலுடனும் ரசிகரகளை உற்சாகப்படுத்தி வருகிறார். அடுத்த வருடம் அவரது பொன்விழா ஆண்டை நடத்த திட்டமிட்டு வருகிறார்கள். சினிமாவில் அவர் செய்த சாதனை ஏராளம். இதையும் படிங்க: ‘தல’ னு கூப்பிட வேணானு சொன்னாரு! ஆனால் இப்போ அஜித்குமாரும் இல்லையாம் – என்ன பேர் தெரியுமா? அந்த பொன்விழா ஆண்டை எதிர்பார்த்து திரையுலகமே காத்துக் கொண்டிருக்கிறது. அதை யார் நடத்தப் போகிறார்கள் என்பதில்தான் ட்விஸ்ட்டே இருக்கிறது. தற்போது ரஜினி வேட்டையன் திரைப்படத்தில் லைக்காவுடன் கைகோர்த்திருக்கிறார். அடுத்ததாக லோகேஷின் படத்தில் இணைகிறார் ரஜினி. அதாவது அவருடைய பொன்விழா ஆண்டில் லோகேஷ் படம்தான் வெளியாகும். அதனால் லோகேஷ் இயக்கப் போகும் ரஜினியின் 171வது படம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, இதையும் படிங்க: என்னது இளைய தளபதி சிவகார்த்திகேயனா? கொஞ்சம் கூட ஒட்டலயே – எல்லாம் ‘அயலான்’ கையிலதான் இருக்கு ஒரு தரமான படமாக இருக்க வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து கதையை எழுதி வருகிறாராம் லோகேஷ். ரஜினியின் பொன்விழா ஆண்டில் லோகேஷின் படம் மிகவும் சிறப்புவாய்ந்ததாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. அதனால் அவரது பொன்விழா ஆண்டில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் வெளியாவதால் அந்த விழாவை சன்பிக்சர்ஸ்தான் நடத்துவார்கள். அதுமட்டுமில்லாமல் கலாநிதி மாறன் ரஜினியின் தீவிர ரசிகரும் கூட. அதனால் நிச்சயமாக அவர்தான் நடத்துவார் என்றும் சொல்லப்படுகிறது. இதையும் படிங்க: சிவாஜியை காப்பி அடித்து ரஜினி நடித்த படம்!.. ஆனாலும் தனது ஸ்டைலில் அசத்திய சூப்பர்ஸ்டார்!.. அதற்கு முன்பாக ரஜினியை பற்றி ஒரு டாக்குமெண்டிரியையும் அவருடைய மகள்களில் யாராவது ஒருவர் எடுக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
