×

நீண்ட நாள் வாழ்க… என் இளைய சகோதரா? சூப்பர் ஸ்டாரை வாழ்த்திய கமல்!

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மலையாள சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளாக விளங்கி வருபவர்கள் மம்மூட்டியும் மோகன் லாலும். முழுமையான நடிகர் என அனைவராலும் புகழப்படும் மோகன் லால் இன்று தனது 59 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இது சம்மந்தமாக அவருக்கு பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

மோகன் லாலின் நெருங்கிய நண்பரான கமல் சமூகவலைதளத்தில் ‘பிரியத்துக்குரிய மோகன்லால் அவர்களே, உங்களை முதல் படத்தில் இருந்தே பிடிக்கும். உங்கள் படங்களின் தரத்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். நீங்கள் என்னுடன் நடிக்கும் போது உங்களை மேலும் பிடிக்கும். நீண்ட நாள் வாழ்க என் இளைய சகோதரனே’ எனத் தெரிவித்துள்ளார்.

கமலும் மோகன்லாலும் கடைசியாக உன்னைப் போல் ஒருவன் படத்தில் 2009 ஆம் ஆண்டு இணைந்து நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News