×

முதல்ல உன் முதுகை பாரு.... தன்னை கலாய்த்த சித்ராவிற்கு ஷிவானி பதிலடி!

ஷிவானி சித்ராவிற்கு இடையில் முற்றிய சண்டை...  

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சித்ரா. சீரியலில் நடிப்பதற்கு முன்னர் இவர் தொகுப்பாளராகவும் பணியாற்றியவர். முல்லை கதாபாத்திரம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் பெரும் பிரபலமாகிவிட்டார் சித்ரா.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் இன்ஸ்டாவிலே மூழ்கி கிடக்கும் சித்ராவிடம் விதவிதமான போட்டோக்களை பதிவிட சொல்லி ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

கர்களை திருதிப்படுத்த அவரும் அடிக்கடி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது ட்ரடிஷனல் உடையில் இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்த புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர் கிளாமர் போஸ் கொடுங்கள் என கேட்டதற்கு அந்த மாதிரி போட்டோவுக்கு ஷிவானியின் இன்ஸ்டாவிற்கு போங்கள் என மறைமுகமாக பதில் அளித்தார். தற்ப்போது சித்ராவிற்கு பதிலடி கொடுத்துள்ள ஷிவானி " என்னை பிடிக்கவில்லை என்றாலும் நீ என்னுடைய நடவடிக்கைகளை கவனித்தால் நீயும் என் ரசிகர் தான்... மற்றவர்களை பற்றி பேசும் முன் உன் முதுகை பார் நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News