லால் சலாம் வசூல் இத்தனை கோடியா?.. உருட்டுனாலும் ஒரு நியாயம் வேணாமாடா.. சிக்கிய ரஜினி ரசிகர்!..

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி படுதோல்வி படமாக மாறியது. நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனமே அந்த படத்தை இன்னமும் வாங்கி வெளியிடாமல் இருப்பதாக கூறுகின்றனர்.

இந்நிலையில், அந்த படம் கிட்டத்தட்ட 100 கோடி வசூலை நெருங்கி விட்டதாக ரஜினி ரசிகர் என சொல்லிக் கொண்டு சோஷியல் மீடியாவில் உருட்டிக் கொண்டிருக்கும் சத்யன் ராமசாமி அளித்த பேட்டியை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கவினை பார்த்து தெறித்து ஓடிய சந்தானம்!.. தைரியமா கிளாஷ் விட்டா முதலுக்கே மோசமாகிடும் பாஸ்!..

நடிகர் தனுஷை விவாகரத்து செய்து விட்டு இயக்குநராக வேண்டும் என்கிற வெறியுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அப்பா தயவுடன் இயக்கிய லால் சலாம் படம் 16 கோடிக்கு மேல் வசூல் செய்யாமல் பெரும் நஷ்டத்தை லைகா நிறுவனத்துக்கு ஏற்படுத்தி விட்டதாகவும் லைகா நிறுவனம் அஜித்தின் விடாமுயற்சி படத்துக்கே செலவு செய்ய முடியாத அளவுக்கு கஷ்டப்பட்டு வருவதற்கு காரணமே லால் சலாம் தான் எனக் கூறுகின்றனர்.

இந்நிலையில், கில்லி ரீ ரிலீஸ் திரைப்படம் லால் சலாம் படத்தின் லைஃப் டைம் வசூலை கடந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், அதெல்லாம் சுத்த பொய் என சொன்ன சத்யன் ராமசாமி லால் சலாம் திரைப்படம் 92 கோடி ரூபாய் வசூல் என்றும் விரைவில் 100 கோடியை நெருங்கப் போவதாகவும் கூறி ஷாக்கை கிளப்பி உள்ளார்.

இதையும் படிங்க: அரண்மனை 4 அலையில் சிக்கி சின்னாபின்னமான சிவகார்த்திகேயன்!.. எதுக்கு தம்பி இந்த வேண்டாத ரிஸ்க்!

அவரது பேச்சை கேட்ட தொகுப்பாளரே அவரை கழுவி ஊற்றிய நிலையில், விஜய் ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து இவன் தானா ரஜினிகாந்த் ரசிகர் என கலாய்த்து அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

உருட்டுனாலும் ஓரளவுக்கு உருட்டுங்கப்பா என்றும் இப்படி உலகமகா உருட்டு உருட்டி லைகா நிறுவனத்தையே கடுப்பாகிடாதீங்க ப்ரோ என சத்யன் ராமசாமிக்கு விஜய் ரசிகர்கள் அட்வைஸும் கொடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அந்த நடிகருடன் ஷூட்டிங்!.. எம்.ஜி.ஆருக்கே அல்வா கொடுத்த சரோஜாதேவி!.. நடந்தது இதுதான்!..

 

Related Articles

Next Story