Connect with us

Cinema News

அரண்மனை 4 அலையில் சிக்கி சின்னாபின்னமான சிவகார்த்திகேயன்!.. எதுக்கு தம்பி இந்த வேண்டாத ரிஸ்க்!

சுந்தர் சி இயக்கி நடித்து கடந்த வாரம் வெளியான அரண்மனை 4 படத்துக்கு போட்டியாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான குரங்கு பெடல் திரைப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது நடிகர் சிவகார்த்திகேயன் வெகுவாக பாதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிவகார்த்திகேயன் நடித்து இந்த ஆண்டு வெளியான அயலான் திரைப்படமே ஓவர் பில்டப் உடன் வந்து கடைசியில் ஓடாமல் போய்விட்டது. பல ஆண்டுகளாக அந்தப் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்து உருவாக்கி வந்த நிலையில் ஏலியன் படமான அயலான் திரைப்படம் பட்ஜெட் அளவுக்கு கூட வசூல் செய்யவில்லை என கூறப்பட்டது.

இதையும் படிங்க: அந்த நடிகருடன் ஷூட்டிங்!.. எம்.ஜி.ஆருக்கே அல்வா கொடுத்த சரோஜாதேவி!.. நடந்தது இதுதான்!..

அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் இந்த ஆண்டு சம்மருக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக்கியுள்ள அந்த படம் இன்னமும் ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை.

தேர்தல் முடிந்த பின்னர் பல தமிழ் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் பெரிய படங்கள் ரிலீசுக்கு அஞ்சி நடுங்குவது அந்த படங்கள் எந்த அளவுக்கு உருவாகியுள்ளது என்பதே வெளிக்காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: கண்ணதாசன் அழைத்தும் போகாத எம்.எஸ்.வி!… சந்திக்கவே முடியாமல் போன சோகம்!.. அட பாவமே!..

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதன் பின்னர் நெஞ்சமுண்டு நேர்மை உண்டு மற்றும் வாழ் திரைப்படங்கள் வெளியாகின. அந்த இரண்டு படங்களும் பெரிதாக ஓடவில்லை. இந்நிலையில், அரண்மனை 4 படத்துக்கு போட்டியாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான குரங்கு பெடல் திரைப்படம் மொத்தமாகவே இதுவரை 30 லட்சம் மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரண்மனை 4 திரைப்படம் அதிரடியாக நான்கு நாட்களில் 30 கோடி ரூபாய் வசூலை கடந்து வெற்றி நடை போட்டு வருவதாக கூறுகின்றனர். ஒவ்வொரு மாதமும் பெரிய படங்கள் இந்த ஆண்டு பிடித்து வைத்திருக்கும் நிலையில் அமரன் திரைப்படம் எப்போது வெளியாகும் என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய்க்கு சொன்ன கதையில அஜீத்தை நடிக்க வச்சிட்டேன்… சுந்தர்.சி. போட்டு உடைத்த ரகசியம்!

google news
Continue Reading

More in Cinema News

To Top