×

மனைவியால் ஏற்பட்ட நஷ்டம்… சூரரைப் போற்று படத்தில் அட்ஜஸ்ட் செய்துகொண்ட சூர்யா!

சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடி நிறுவனத்துக்கு விற்கப்பட்டதற்கு பின்னணியில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படமும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

 

சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடி நிறுவனத்துக்கு விற்கப்பட்டதற்கு பின்னணியில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படமும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம்சூரரை போற்று”. மிக நீண்ட காத்திருப்புகளுக்குப் பின்னர் அமேசான் ப்ரைம் தளத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் சூர்யாவும் உறுதிப்படுத்தியுள்ளார்ஆனால் இதற்கு திரையுலகினர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதற்கிடையில் சூரரைப் போற்று திரைப்படம் கிட்டத்தட்ட 45 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் சூர்யாவின் தமிழக மற்றும் ஆந்திர மார்க்கெட்டுக்கு இந்த விலை மிகவும் கம்மி எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் ஏன் இவ்வளவு கம்மியான விலைக்கு சூர்யா தனது படத்தைக் கொடுத்தார் என்பது குறித்து வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே சூர்யா தயாரித்து ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் ஓடிடியில் ரிலிஸாகி வரவேற்பைப் பெறாததால் அதற்கான நஷ்ட ஈடாக இந்த படத்தை கம்மியான விலைக்கு அந்த நிறுவனம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News