Categories: Cinema News latest news

நோகாமல் நொங்கு திங்க ஆசைப்படும் லைக்கா நிறுவனம்! ‘தலைவர் 170’ ல் கல்லா கட்ட இதுதான் ஒரே வழி

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி 25 நாள்களையும் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜெய்லர். தமிழ் சினிமா வரலாற்றிலேயே 25 நாள்களையும் தாண்டி திரையங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் அது ஜெய்லர் தான் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் சூப்பர் ஸ்டார்களை ஒன்றிணைத்து இந்தப் படத்தில் காட்டியதும் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது. மேலும் அனிருத்தின் பின்னனி இசையும் தாறுமாறு ஹிட். மொத்தத்தில் படம் ஒரு டபுள் டமாக்கா ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமைந்தது.

இதையும் படிங்க : அப்பாவுக்கே இயக்குனராகும் மகன்.. 30 ஆண்டுகளுக்கு பின் இணையும் கூட்டணி…

ஜெய்லர் திரைப்படம் இதுவரைக்கும் 600 கோடிக்கும் மேல் வசூலை பெற்றுள்ளது. அந்த மகிழ்ச்சியில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினி, நெல்சன், அனிருத் என படத்தில் பணியாற்றிய முக்கிய பிரபலங்களுக்கு பரிசுகளை அள்ளி வீசிக் கொண்டு வருகிறார்.

இதற்கிடையில் ரஜினி அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் கமிட் ஆகியிருக்கிறார். அதற்கான படப்பிடிப்புகளும் ஆரம்பமாகியுள்ளன. இந்தப் படத்தில் மஞ்சு வாரியார், பகத் ஃபாசில் போன்ற முக்கிய பிரபலங்களும் நடிக்கின்றனர்.

இதையும் படிங்க ; குஷி வெற்றியால் சந்தோஷத்தில் விஜய்!.. 100 குடும்பங்களுக்கு பெரிய தொகையை பரிசா கொடுக்கப்போறாராம்!..

இந்த நிலையில் ரசிகர்கள் ஞானவேலுவுக்கு ஒரு கோரிக்கையை வைத்திருக்கின்றனர். பொதுவாக ஞானவேலுவின் படம் என்றாலே சமூக கருத்துக்களை உள்ளடக்கிய திரைப்படமாகத்தான் இருக்கும். உதாரணமாக ஜெய்பீம் படத்தை கூறலாம். ஆனால் ரஜினியின் மாஸ் ஜெய்லர் படத்தின் வெற்றிக்கு பிறகு இன்னும் உயர்ந்திருக்கிறது. அதனால் ஒரு 10 சதவீதம் ரஜினியிசத்தை படத்தில் ரசிகர்களுக்காக காட்ட வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

மேலும் இந்தப் படத்தை லைக்கா நிறுவனம்தான் தயாரிக்கிறது. அதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெய்லரில் சம்பாதித்ததை விட இந்தப் படத்தின் மூலம் லைக்கா தான் அதிகமாக சம்பாதிக்க போகிறது என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க : அந்த முடிவ எடுத்து முச்சந்தியில நின்னதுதான் மிச்சம்! பண்ண தப்ப நினைச்சு வருத்தப்படும் கிரண்

அதற்கு காரணம் ஏற்கனவே ஜெய்லர் ஏற்படுத்திய தாக்கம் தான் என்றும் ஜெயிலர் படம் எல்லா ஏரியாக்களிலும் பெரிய ஹிட் அடித்ததால் தலைவரின் அடுத்த படத்தை லைக்கா பெருசா வியாபாரம் செய்து விடுவார்கள் என்றும் தெரிகிறது. 

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini