இசை மழையில் இரண்டு ராஜாக்கள்!.. 30 ஆண்டுகளுக்கு பின் இணையும் கூட்டணி...
பாரதிராஜா தமிழ் சினிமாவின் பழங்கால முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இவர் 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். கிராமத்து கதைகளை இயக்குவதில் வல்லவர். இவர் சிவப்பு ரோஜாக்கள், முதல் மரியாதை, கருத்தம்மா போன்ற கிராமத்து கதைகளின் மூலம் தனக்கென சினிமாவில் தனி அடையாளத்தினை உருவாக்கி கொண்டுள்ளார்.
இவரின் மகன் மனோஜ் பாரதிராஜா. இவர் தாஜ்மஹால், சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்த இவர் பின் தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மஹால் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
இதையும் படிங்க: பாரதிராஜா மனதில் நினைத்ததை பாட்டில் சொன்ன கண்ணதாசன்!. இப்படி ஒரு தீர்க்கதரி்சியா?!..
அன்னக்கொடியும் கொடிவீரனும் என்ற திரைப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் இவரின் நடிப்பு மிகவும் தத்ரூபமாக இருந்தது. இப்படமும் இவரின் தந்தை இயக்கிய திரைப்படம் ஆகும். கிட்டத்தட்ட பாரதிராஜா படங்களை இயக்கி 5 ஆண்டுகளுக்கு பின் இயக்கப்பட்ட படம் இதுவாகும்.
இவ்வாறு உதவி இயக்குனராகவும், நடிகராகவும் இருந்த மனோஜ் பாரதிராஜா தற்போது இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இவர் மார்கழி திங்கள் என்ற திரைப்படத்தினை இயக்க உள்ளார். இப்படத்தினை பிரபல இயக்குனரான சுசிந்திரன் தனது வெண்ணில புரொடக்ஷன் நிறுவனத்தின் கீழ் தயாரிக்க உள்ளார். இப்படத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் இப்படத்தில் இவரின் தந்தை பாரதிராஜா நடிக்க உள்ளார்.
இதையும் படிங்க: எவனோ போட்டிக்கு வந்துட்டான்… பாரதிராஜா படம் பார்த்து ஷாக்கான பாலசந்தர்… என்ன படமோ!
புதுமுக நட்சத்திரங்களான சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிசான் போன்றோர் இப்படத்தின் மூலமாக சினிமா துறையில் அறிமுகமாக இருக்கின்றனர். மேலும் இப்படத்தில் இன்னொரு சம்பவமும் அரங்கேற இருக்கிறது. கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு பின் இளையராஜா மற்றும் பாரதிராஜா கூட்டணி இப்படத்தில் இணைய இருக்கிறது. 80ஸ், 70ஸ்களில் பெரும்பாலான திரைப்பட பாடல்களில் இவரிகளின் கூட்டணியை நாம் காணலாம்.
இவர்கள் இருவரும் கடைசியாக நாடோடி தென்றல் என்ற திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினர். இவ்வளவு ஆண்டுகளுக்கு பின் இவர்கள் இணையும் கூட்டணி கண்டிப்பாக வெற்றி அடையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மேலும் மனோஜ் பாண்டியன் தனது தந்தையை வைத்து படம் எடுப்பது இவரின் வாழ்வில் மிக முக்கிய திருப்பு முனையாக அமையும். எது என்னமோ மூன்று ராஜக்களின் கூட்டணியும் நமக்கு சிறப்பான திரைப்படத்தை தரும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாரதிராஜாவுக்கே ஐடியா கொடுத்த நடிகர்… முதல் படமே தோல்வி… இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?