×

ஆசம்!...அட்டகாசம்.!..லைக்கா வெளியிட்ட ‘பொன்னியின் செல்வன்’ போஸ்டர்...

 
ponniyin

இயக்குனர் மணிரத்னம் தற்போது பலரும் தொட தயங்கிய மற்றும் எடுக்க முடியாமல் போன ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை மணிரத்னத்துடன் இணைந்து லைகா நிறுவனமும் தயாரித்து வருகிறது.

பாகுபலியை போல் இப்படம் 2 பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, அமலாபால் என பெரிய நடிகர், நடிகையர் பட்டாளமே நடித்து வருகிறது.இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த படம் துவங்கி ஒன்றரை வருடம் ஆகியும் இப்படம் பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.  துவக்கத்தில் ஒரு போஸ்டர் மட்டும் வெளியானது.

ponniyin

இந்நிலையில், இப்படம் தொடர்பாக ஒரு அசத்தலான போஸ்டரை லைக்கா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. முதல் போஸ்டரில் கத்தி மட்டும் இடம் பெற்றிருந்தது. இந்த புதிய போஸ்டரில் கத்தியோடு சேர்ந்து கேடயமும் இடம் பெற்றுள்ளது. PS-1 என குறிப்பிடப்பட்டிருப்பதால் இது முதல் பாகத்தின் போஸ்டர் என கருத வேண்டியுள்ளது.

ponniyin selvan

From around the web

Trending Videos

Tamilnadu News