நடிகருக்கு அந்த பழக்கமே இல்லையாம்!... ஆனா படத்துக்காக என்ன செஞ்சாரு தெரியுமா?
Jan 17, 2024, 09:45 IST
Actor: பொதுவாக சினிமாவுக்காக சில நடிகர்கள் குடிப்பதையும், சிகரெட் பிடிப்பதை ஸ்டைல் என செய்து வருகின்றனர். ஆனால் அதில் சிலருக்கு உண்மையான பழக்கம் இருக்கும். இதை ரஜினி போன்றோர் தனக்கு அந்த பழக்கம் இருந்ததாக உண்மையை சொல்லி விடுவார்கள். சிலர் அதை படக்காட்சி என உண்மையை சொல்லாமலே கடந்தும் விடுவார்கள். சிலர் தங்கள் படங்களில் தப்பானதை காட்டி விடக்கூடாது. அதே நேரத்தில் படத்தின் காட்சியை அது பாதிக்கவும் கூடாது என்பதற்காக கொஞ்சம் ரிஸ்க் எடுத்து சிலதை செய்வார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்து இருக்கிறது. இதையும் படிங்க: சிம்பு – தேசிங்கு பெரியசாமி படம் டிராப் ஆகிறதா?!.. என்னப்பா சொல்றீங்க?!.. நடப்பது என்ன?.. இந்த பொங்கலுக்கு மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படமும் ரிலீஸ் ஆனது. தமன் இசையமைத்து இருந்த இப்படத்தினை த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கி இருந்தார். இப்படத்தில் மகேஷ் பாபு சிகரெட் பிடித்து நடித்து இருப்பார். ஆனால் அவருக்கு உண்மையிலேயே குடி, சிகரெட் என்ற எந்த பழக்கமும் இல்லையாம். அப்படி இருக்க ஒரு காட்சிக்காக அவருக்கு பீடி கொடுக்கப்பட முதலில் எதுவும் சொல்லமலே மகேஷ் பாபு பிடித்து அந்த காட்சியில் நடித்தும் விட்டார். கடைசியில் அதனால் அவருக்கு ஒற்றை தலைவலி வந்து ரொம்பவே அவதிப்பட்டு இருக்கிறார். இதையும் படிங்க: செம நக்கல்யா உனக்கு!.. மீண்டும் விஜய்யை வான்ட்டட்டா வம்புக்கு இழுத்த மீசை ராஜேந்திரன்!..
பின்னர் இதுக்கு வழி என்ன என யோசிக்கும் போது ஆயுர்வேதிக் பீடி பற்றி தெரிந்து இருக்கிறது. அதில் புகையிலையே கிடையாதாம். லவங்கம் கலந்து புதினா டேஸ்ட்டில் இருக்கும் பீடியை தான் பிடித்தேன். எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லை. அதை ஊக்குவிக்கவும் மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
