அட நான் எவ்வளோ அழகா பல்லு விளக்குறேன்.. மீம்மை மெச்சிக்கொண்ட மாளவிகா
மாளவிகா தன்னை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்மை இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்.
Wed, 3 Feb 2021

பொங்கல் தினத்தில் வெளியான படம் மாஸ்டர். எக்கசக்க சாதனைகளை செய்து வசூல் வேட்டையில் இருக்கும் இப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன். குறைந்த காட்சிகளில் வந்தாலும் தனது நடிப்பு திறமையை செமையாக காட்டி இருந்தார். ஒரு காட்சியில் விஜயிடம் ஆக்ரோஷமாக பேசி இருப்பார்.
அந்த காட்சியை கொண்டு பல மீம்கள் இணையத்தில் றெக்கை கட்டி பறந்தன. மாளவிகா பல்லு விளக்குவது, சாப்பிடுவது என அளவிலாத அட்ராசிட்டிகளை செய்து இருந்தனர் நெட்டிசன்கள். இப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார் மாளவிகா. அதிலும் அவரின் பல் விளக்கும் மீம் தான் அவரின் பேவரிட் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது அவரின் இந்த போஸ்ட்கள் தான் இணையத்தில் வைரல் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.