வயதான காலத்திலும் தம்பதிகள் விவாகரத்து செய்து வருவது வாடிக்கையாகி வருகிறது. அதிலும், பிரபலங்களின் திருமண வாழ்க்கையே சொல்ல தேவையில்லை. அமீர்கான் முதல் தனுஷ் வரை பல வருடங்கள் வாழ்ந்து விட்டு குழந்தைகள் எல்லாம் தோள் உயர வளர்ந்த பின்னரும் விவாகரத்து செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அது போன்ற ஒரு கதையாகவே மம்மூட்டி மற்றும் ஜோதிகா நடித்துள்ள காதல் தி கோர் எனும் மலையாள படம் உருவாகி உள்ளது. அதன் டிரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஷங்கர், லோகேஷ் கனகராஜ்லாம் ஜப்பான் படத்தை பார்க்கவே இல்லையே?.. கொளுத்திப் போட்ட ப்ளூ சட்டை மாறன்!..
மலையாள இயக்குனர் ஜோ பேபி இயக்கி உள்ள இந்த படத்தில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி அரசியல் ஆசை காரணமாக தேர்தலில் களமிறங்கப் போவதாக அறிவிக்கிறார்.
அவ்வளவு தான் அவரது மனைவி ஜோதிகா அவரை விவாகரத்து செய்து பிரிய முடிவு செய்கிறார். வயதுக்கு வந்த மகனும் மகளும் தங்களுடைய பெற்றோர்கள் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமல் படும் துயரங்களை காட்சிகளாகவும், வலி நிறைந்த வேதனைகளாகவும் அடுக்கி இப்படியொரு உணர்ச்சி பூர்வமான படத்தை உருவாக்கி உள்ளனர்.
இதையும் படிங்க: அன்பே வா படத்தில் டான்ஸில் பொளந்து கட்டிய புரட்சித்தலைவர்!.. இது எப்படி நடந்ததுன்னு தெரியுமா?
நடிகை ஜோதிகா மலையாளத்துக்கு சென்று மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்துள்ள கதையை பார்த்தால், கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தனுஷ் பிரிந்த கதை போல இருக்கிறதே என்றும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தனியாக பிரிந்து வாழ்வது போல உள்ளது என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
ஹாலிவுட்டில் கன்யே வெஸ்ட் அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்த நிலையில், தான் அவரது மனைவி கிம் கர்தாஷியன் விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பல இடங்களில் இந்த பிரச்சனை உள்ள நிலையில், படமாக வெளியானால் கண்டிப்பாக பல பிரபலங்களையும் கனெக்ட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜோதிகாவுக்கு மலையாளத்திலும் நல்ல வரவேற்பு இந்த படத்தின் மூலம் கிடைக்கும்.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…