
Cinema History
அன்பே வா படத்தில் டான்ஸில் பொளந்து கட்டிய புரட்சித்தலைவர்!.. இது எப்படி நடந்ததுன்னு தெரியுமா?
பழம்பெரும் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் அன்பே வா படத்தில் எம்ஜிஆரை வித்தியாசமாக ஆட வைத்த அனுபவத்தை சொல்கிறார் பாருங்கள்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாட்டுக்கு நடனம் ஆடுவது என்றாலே அங்கும் இங்கும் ஓடுவார், துள்ளுவார், பெஞ்சில் ஏறிக் குதிப்பார் என்று தான் மக்கள் நினைத்து இருந்தார்கள். அதுவரை அவர்கள் பார்த்து ரசித்ததும் இதுதான்.

Anbe va
ஆனால் அன்பே வா படத்தில் எம்ஜிஆர் வெஸ்டர்ன் டான்ஸ், கிளாசிக்கல் டான்ஸ் என இரண்டையும் ஆடி அசத்தி ரசிகர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருப்பார். இந்த அதிசயம் எப்படி நடந்தது என இயக்குனர் திருலோகசந்தர் என்ன சொல்கிறார்னு பார்க்கலாம்.
எம்ஜிஆர் படங்கள் என்றாலே அநியாயத்தைத் தட்டிக்கேட்பார். ஏழையாக இருப்பார். பயங்கரமாக சண்டை போடுவார். விதவிதமான முரடர்களை சந்திப்பார் என்று தான் இருந்தது. ஆனால் இந்தப் படம் எல்லாமே முற்றிலும் மாறுபட்டதாய் இருந்தது.
ஏவிஎம்மின் 50வது படம். அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு இதுதான் முதல் கலர் படம். எம்ஜிஆருக்கு இது ஒரு சகலகலாவல்லவன். இந்தப் படைப்பு நல்லபடியாக நிறைவேற வேண்டுமே என்ற பயம் இருந்தது.
படத்தில் ஒரு பாடலுக்கு நடன அசைவுகள் அதிகமாக இருந்தன. டான்ஸ் மாஸ்டர் சோப்ரா எம்ஜிஆரை ரிகர்சலுக்கு அழைத்தார். புலியைப் பார் நடையிலே பாடல். என்னை எம்ஜிஆர் அழைத்தார். திருலோக். படு பயங்கரமான ஸ்டெப்ஸ் இருக்கு.

MGR dance
ஆங்கில, இந்திய, கதக் பாணி. இதை என்னால் ஆட முடியாது. டூப் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள். என்னுடைய குளோசப் ஷாட்களை அங்கங்கே வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.
அப்போதே இதை வேறு மாதிரி கையாள நினைத்தேன். அவரது விருப்பப்படியே ஒரு டூப்பை வைத்து நடனங்களை எடுத்தேன். பிறகு அந்தப் பாட்டைப் படமாக்க வேண்டிய நாள் வந்தது. நீங்கள் எடுத்த அந்தப் பையனின் நடனக்காட்சிகளைப் பார்க்கலாமா என்றார். எடிட்டர் ஊரில் இல்லை.
அந்த ஷாட்டுகளை எங்கே வைத்திருக்கிறார்னு தெரில. நான் எடுத்தது எனக்கு ஞாபகமிருக்கு. உங்கள் ஸ்டெப் எதெதுன்னு நான் பிளான் பண்ணி வச்சிருக்கேன். எடுத்துவிடுவோமா என்றேன்.
நானும், சோப்ரா சாரும், கேமராமேன் மாருதி ராவும் பேசியபடி வேலையை ஆரம்பித்தோம். எம்ஜிஆர் நடனமாடத் தொடங்கினார். எல்லாத் தீவிர அசைவுகளும் நாங்கள் உற்சாகப்படுத்த அவருக்கு சரளமாக வந்தது. செட்டில் இருந்த 100க்கும் மேற்பட்ட நடனமணிகள், சரோஜாதேவி, டெக்னீஷியன்ஸ் எல்லோருமே அசந்துட்டாங்க. டான்ஸ் முடிந்தது. கடைசியில் பார்த்தால் எல்லாமே அவர் தான் ஆடியிருக்கிறார். உண்மை அவருக்கே தெரிந்துவிட்டது. என்னிடம் என்ன திருலோக் இது? என்றார். எனக்கு உங்கள் திறமை பற்றிதெரியும் என்றேன். சிரித்தபடி என் தோளைத் தட்டினார்.