×

மனுஷன் ஒரு ஜென்டில்மேன்...  பிகினியில் நயன்தாரா நடித்தது குறித்து அஜித் அதிரடி பதில்!

பல தோல்களை சந்தித்து ஒரு கட்டத்தில் சோர்ந்துகிடந்த அஜித்துக்கு பில்லா படம் மிகப்பெரிய பிரேக் கொடுத்தது என்றால் மிகையல்ல. பில்லா படம் கடந்த 2007ம் ஆண்டு வெளியாகியது. அஜித், நயன்தாரா, நமிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை  வர்தன் இயக்கி இருந்தார்.

 

பில்லா என்றோலே அஜித் பேசிய வசனமான “சரித்திரத்தை ஒரு முறை திரும்பி பாருங்கள் நாம் வாழ வேண்டுமென்றால் யாரை வேண்டுமானாலும், எத்தனை பேர வேண்டுமானாலும் கொல்லலாம்” என்ற வசனம் தான் பில்லாவின் மிகப்பெரிய பஞ்ச் டயலாக்.. இந்த படத்தில் யுவன்சங்கர் ராஜாவின் பின்னணி இசை இன்னும் பல வருங்களுக்கு பேசப்படும்.

நிச்சல் உடையில் வலம் வரும் நயன்தாராவின் சாகசங்கள், நான் மீண்டும் ஆணாக வேண்டும் என்ற நமீதாவின் கவர்ச்சி நடனம் பில்லா படத்தில் மிரட்டலாக இருக்கும்.  இந்நிலையில் நயன்தாரா பில்லா படத்தில் நீச்சல் உடையில் நடித்தது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய அஜித், " நான் ஒரு நடிகன், அவர் ஒரு நடிகை, இயக்குனர் சொன்னதை செய்தோம், மற்றப்படி அதில் ஒன்றும் இல்லை' என பதில் அளித்தார். இதனை ஒளிப்பதிவாளர் ஜானி தனது ட்விட்டரில் வெளியிட செம வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News