×

கண்ணாடி வீட்டுக்குள் தனிமைபடுத்திக்கொண்ட மணிரத்னம் மகன் - அவருக்கு என்ன ஆச்சு தெரியுமா?

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 325ஐ நெருங்கி விட்டது. தமிழகத்தில் இந்நோய் பரவ துவங்கிவிட்டதால் பொதுமக்கள் மத்தியில் பீதி எழுந்துள்ளது. எனவே, இன்று ஒருநாள் காலை 7 மணி முதல் 9 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
 

பெரும்பாலும், வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு வருபவர்கள் மூலமாகவே இந்நோய் வேகமாக பரவுகிறது. எனவே, விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனாலும், இந்த சோதனை துவங்குவதற்கு முன்பே சிலர் வெளிநாட்டிலிருந்து சென்னை, கேரளா, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும் சென்றுவிட்டனர். அவர்கள் மூலம் கொரோன வைரஸ் பரவி விடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில், 5 நாட்களுக்கு முன்பு லண்டனலிருந்து சென்னை வந்த இயக்குனர் மணிரத்னத்தின் மகன் நந்து தனது வீட்டில் ஒரு கண்ணாடி கூண்டுக்குள் வசித்து வருகிறார். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அவர் இதை செய்துள்ளார். அவரிடம் சில கேள்விகளை கேட்டு அவரின் தாயும், நடிகையுமான சுஹாசினி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ந்துவின் இந்த செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News