Categories: Cinema News latest news

காலையில தான் லவ்வர்ன்னு அறிமுகப்படுத்திட்டு!.. இப்போ அசிங்க அசிங்கமா திட்டுறாரே மணிகண்டன்!..

நடிகர் மணிகண்டன் ஹீரோவாக அப்படியே ஃபார்ம் ஆகி விட்டார். இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான குட் நைட் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறிய நிலையில், அடுத்து லவ்வர் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோ நிறுவனமே இந்த படத்தையும் தயாரித்துள்ளது. காலையில்  திவ்யா என்னை லவ் பண்றியா என ரியல் லவ்வர் போலவே பார்க்கில் நடிகை ஸ்ரீ கெளரி பிரியாவிடம் கேட்கும் போது ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர்.

இதையும் படிங்க: அறிமுக இயக்குனர்கள் அசத்தல் ஹிட் கொடுத்த 2023!.. அன்பால் அரவணைத்த அயோத்தி…

கடைசியில் பார்த்தால் அது படத்தின் புரமோஷனுக்கான யுக்தியாம். அதிரடியாக ஆரம்பித்து, தற்போது டீசரையும் வெளியிட்டுள்ளனர். அறிமுக இயக்குநர் பிரபு ராம் இந்த படத்தை இளமை துள்ளல் உடன் எடுத்திருக்கிறார். டீசர் முழுக்க காதலர்களுக்கு இடையே நடக்கும் சண்டை, சந்தேக புத்தி, ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வது, பிரேக்கப், ரொமான்ஸ் என அத்தனை எமோஷனையும் மணிகண்டனும் ஸ்ரீ கெளரி பிரியாவும் கொட்டித் தீர்த்துள்ளனர்.

அதை விட டீசர் முழுக்க நாயகியை மணிகண்டன் திட்டித் தீர்த்து இருப்பது தான் ரொம்பவே ஷாக்காக உள்ளது.

இதையும் படிங்க: நடிகரை சரக்கடிக்க வச்சி மாட்டிவிட்ட சந்திரபாபு!.. கடுப்பான எம்ஜிஆர்.. படப்பிடிப்பில் நடந்த களேபரம்..

இதெல்லாம் சென்சாரில் சிக்கினால் படம் வெளியாகும் போது நல்லா இருக்காதே பாஸ் என மணிகண்டனை பார்த்து ரசிகர்கள் பரிதாபமாக கேட்டு வருகின்றனர். குட் நைட்டில் சாக்லேட் பாயாக இருந்த மணிகண்டன் லவ்வர் படத்தில் ரக்கட் பாயாக மாறி உள்ளார். காதலர் தினத்தை முன்னிட்டு இந்த மாதம் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு வெளியாகிறது.

 

Saranya M
Published by
Saranya M